Rasipalan: மிதுனத்துக்கு கவனம்... கன்னிக்கு லாபம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!
RasiPalan Today May 16: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 16.05.2023 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களை பற்றி கருத்துகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். பணி நிமிர்த்தமான பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிக்கல்கள் விலகும் நாள்.
மிதுனம்
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயின் ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
கடகம்
முயற்சிக்கு ஏற்ப மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போட்டிகள் நிறைந்த நாள்.
சிம்மம்
மருமகன் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். நிர்வாக திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக வலைத்தளம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
கன்னி
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.
துலாம்
கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
விருச்சிகம்
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொறுமை நிறைந்த நாள்.
தனுசு
இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய இலக்கினை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வருமானம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். சோர்வு நீங்கும் நாள்.
மகரம்
மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். பொறுமை நிறைந்த நாள்.
கும்பம்
குழந்தைகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். சாதனை நிறைந்த நாள்.
மீனம்
உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரை பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். குழப்பம் விலகும் நாள்.