Rasipalan December 16: கன்னிக்கு பாசம்... ரிஷபத்துக்கு ஊக்கம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
RasiPalan Today December 16: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 16.12.2022
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
மதியம் 2.15 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
ரிஷபம்
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஊக்கம் நிறைந்த நாள்.
மிதுனம்
புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். வாகன பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
கடகம்
மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
சிம்மம்
உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. கற்பனை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். அன்பு வேண்டிய நாள்.
கன்னி
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாசனை திரவியம் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகம் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். பாசம் நிறைந்த நாள்.
துலாம்
ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். விவசாய பணிகளில் அலைச்சல்களுக்கு பின்பு ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.
விருச்சிகம்
வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
தனுசு
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை மேம்படுத்தி கொள்வீர்கள். சமூக பணிகளில் புதிய இலக்கு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தனவரவு மேம்படும் நாள்.
மகரம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். காப்பீடு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். உறுதி வேண்டிய நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களுடன் தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு போட்டி அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூக பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியங்களில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.