Rasipalan: இன்று சண்டே...! எந்த ராசிக்கு எல்லாம் ஜாலி...? உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today April 16: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 16.04.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
மிதுனம்
செய்யும் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான சூழ்நிலைகள் ஏற்படும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
கடகம்
கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
சிம்மம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
கன்னி
சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபார நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
துலாம்
உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
விருச்சிகம்
நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான விஷயங்களுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
தனுசு
செய்யும் முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவு தேவைக்கு ஏற்ப இருக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
மீனம்
கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வசதிகள் மேம்படும் நாள்.