மேலும் அறிய

Rasipalan Today, June 16 : கும்பத்துக்கு எதிர்பார்ப்புகள் குறையும்... கன்னி சிந்தித்து செயல்படுங்கள்... உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Rasi palan Today,June 16: இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.

நாள்: 16.06.2022

நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.30 மணி முதல் 01.30 மணி வரை 

மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

இராகு :

மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

குளிகை :

காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் :

காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை 

சூலம் –வடக்கு

ராசி பலன்கள் 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். வர்த்தக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தெளிவு நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தக பணிகளில் எதிர்பாராத லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் உண்டாகும். தடைகள் அகலும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும், குழப்பமும் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, மனதில் புதுவிதமான நம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியால் வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனை விருத்தி தொடர்பான எண்ணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் மாற்றம் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Embed widget