Rasi Palan Today : மேஷத்திற்கு எச்சரிக்கை...! ரிஷபத்திற்கு உற்சாகம்...! இந்த நாள் இப்படிதான் இருக்கப்போகுது..!
Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 15 ஜனவரி 2022: இந்த நாள் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே காணலாம்.
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடக்கூடாது. புதிய தொழில் விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஆலய வழிபாடு மனதுக்கு அமைதி தரும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாள் ஆகும். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். மனதில் ஆனந்தமும், உற்சாகமும் பிறக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். புது இடங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணத்தை இன்று தவிர்க்க வேண்டும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களின் தைரியம் அதிகரிக்கும். பெற்றோர்கள், நண்பர்கள், சகோதரர்கள் வழி ஆதரவு அதிகரிக்கும். வெளியில் இருந்து வர வேண்டிய கடன் தொகை இன்று வசூலாகும். பணத்தை செலவு செய்வதில் அதிக கவனம் வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பு உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உண்டாக்கும். தொலைபேசி வழித் தகவல்களால் நன்மை பயக்கும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். மனதில் நீடித்து வந்த மனக்குழப்பம் தீரும். இன்று முக்கியமான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். தொழிலில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மனதில் தேவையில்லாத பயம் உண்டாகும். தைரியமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிவுரையை கேட்க வேண்டும். யாருடனும் வீண் பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஜெயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்கள் நீடித்து வந்த சொத்து தகராறிற்கு இன்று தீர்வு கிட்டும். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவும், தன வரவும் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய ஆபரணங்களை வாங்கி வீட்டில் இருப்பவர்களுக்கு அளித்து மகிழ்வீர்கள். தந்தை – மகள் இடையே அன்பு அதிகரிக்கும்.
மகரம் :
மகர ராசிக்கார்களே இந்த நாள் மனதில் தேவையில்லாத எண்ணங்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த நாள் சிறப்பானதாக அமையும். கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சினைகளுக்கு மனம் விட்டு பேச வேண்டும். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே எதிர்பார்த்த காரியம் தாமதம் ஆகக்கூடும். அமைதியை கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்தில் உயரதிகாரிகள், பொறுப்பில் இருப்பவர்களுடன் சமாதானமாகவும், சுமூகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். வாகனங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். தொழிலில் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த ஆலய பயணத்தை இன்று மேற்கொள்வீர்கள்.