Rasipalan 14 June, 2023: தனுசுக்கு நலம்... மீனத்துக்கு சுகம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 14: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today June 14:
நாள்: 14.06.2023 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். இணையம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
ரிஷபம்
திடீர் பயணங்கள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் புதிய அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான இறுக்கம் உண்டாகும். ரகசியமான சில முதலீடுகள் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். புரியாத செயல்களில் ஆர்வம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.
மிதுனம்
செல்வச் சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். கலைப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். சபைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். பொறுமை நிறைந்த நாள்.
கடகம்
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவு பிறக்கும். தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்மம்
விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான செயல்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கவலைகள் விலகும் நாள்.
கன்னி
பழைய சிக்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மனதில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வருவாய் சார்ந்த நெருக்கடியால் மனதில் அமைதியற்ற நிலை ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். சோதனைகள் நிறைந்த நாள்.
துலாம்
நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதரர்களால் ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் வியாபார ரீதியான சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். கால்நடை சார்ந்த பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
தனுசு
கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நலம் நிறைந்த நாள்.
மகரம்
வியாபார பணிகளில் துரிதம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கும், மதிப்பும் உயரும். புதிய பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.
கும்பம்
மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தகவல் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
மீனம்
கணிதம் தொடர்பான துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை சிலருக்கு சாதகமாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.