Rasi palan May 11: மிதுனத்திற்கு சிறப்பு... மீனத்திற்கு வெற்றி... இன்றைய ராசி பலன்கள்
Rasi palan Today, May 11: இன்றைய ராசிபலன் 11 மே 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்? என்று கீழே காணலாம்.
நாள்: 11.05.2022
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிடவும். உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்தி பலன் காணலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எப்பொழுதும் உறுதியான மனநிலையுடன் இருங்கள். நீங்கள் ஓய்வாகவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். இன்றைய நாளை சாதுர்யமாக நிர்வகியுங்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதியமனிதர்களை இன்று சந்தித்து அவர்களோடு நட்பு கொள்ள இன்றைய தினத்தை பயன்ப்டுத்திக்கொள்ளுங்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். யோகா / தியானம் மேற்கொள்வது உதவிகரமாக இருக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிடுங்கள். நற்பலன்கள் பெறலாம்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்றைய தினம் செழிப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க விரும்பினால் இன்று உகந்த நாள். பூவைப் போல புத்துணர்ச்சியோடு சிறப்பாக இருப்பீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை அளிக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, நீங்கள் எந்த விஷயத்தையும் சகஜமாக அணுக வேண்டும். பதட்டப் படுவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு அமைதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் முழு அளவு சாதகத்தை அளிக்காது. தியானம் மேற்கொண்டு அமைதியாக இருபதன் மூலம் குழப்பங்களைத் தீர்க்க முடியும். நீங்கள் செய்யும் செயலில் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். அவை உங்களுக்கு சாதமாக இருக்கும். இன்று தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்
மீனம்:
மீன ராசி நேயர்களே, உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நீங்கள் உணரும் நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்