மேலும் அறிய

Rasipalan Today, June 27 : ரிஷப ராசிக்கு நம்பிக்கை.. பாராட்டு மழையில் மேஷம்! இன்றைய ராசி பலன்கள்!

Rasi palan Today,June 27: இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.

நாள்: 27.06.2022, திங்கட்கிழமை 

நல்ல நேரம் :

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை 

கௌரி நல்ல நேரம் :

காலை 1.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் காலை 12 மணி வரை

சூலம் – கிழக்கு 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,  மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,  எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இணையம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அரசு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,  கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். குத்தகை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழுக்கள் சார்ந்த விஷயங்களில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,அரசு தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தோன்றும் ஆசைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேளாண்மை சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். மருத்துவத்துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,  நம்பிக்கையானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். முன்யோசனையுடன் செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சட்ட ரீதியான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,  வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளை பெறவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,   வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தவறிப்போன பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலருடைய அறிமுகத்தை பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். புரிதல் உண்டாகும் நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,  பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பந்தய விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,  தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், மன அமைதியின்மையும் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, வாகனத்தில் சிறு சிறு மாற்றத்தை செய்வீர்கள். குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட வருத்தங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் பிறக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திருப்திகரமான நாள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
TVK Vijay: புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Upanishad Ganga Series | உபநிஷத் கங்கா தொடர் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி அண்ணாமலை பங்கேற்பு | AnnamalaiAadhav Arjuna Joined TVK | தவெக-வில் இணையும் ஆதவ்?விஜய்யின் MASTER PLAN! சந்திப்பில் நடந்தது என்ன?Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
TVK Vijay: புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..வந்தது முக்கிய அறிவிப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!
சட்டம் - ஒழுங்கு...இந்த வீடியோவே உதாரணம்... - அண்ணாமலை அட்டாக்
சட்டம் - ஒழுங்கு...இந்த வீடியோவே உதாரணம்... - அண்ணாமலை அட்டாக்
Chennai Tourist Place: சென்னையில் சுத்திப் பார்க்க இவ்ளோ இடங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
Chennai Tourist Place: சென்னையில் சுத்திப் பார்க்க இவ்ளோ இடங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
பழப் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா.. சென்னை ஏர்போர்டில் அதிகாரிகளுக்கு ஷாக்!
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget