Rasi Palan Today | வெற்றி மீது கும்பம்... தனுசு மீது இன்பம்... யாருக்கு கவலை? யாருக்கு நிம்மதி? உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 18 ஜனவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!
நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்லநேரம்:
பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இரவு - 7:30 மணி முதல் 8:30 மணி வரை
ராகுகாலம்:
மதியம்- 3 மணி முதல் 4:30 மணி வரை
குளிகை:
பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை
எம கண்டம்:
பகல் 9 மணி முதல் 10:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
வடக்கு , பால்
சந்திராஷ்டமம்:
மூலம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
குடும்பத்தாரின் உடல்நிலை கண்டு கவலை கொள்வீர்கள். முடிந்தவரை அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் வெளிமாவட்ட பயணம் ஏற்படலாம். வீண் குழப்பங்கள் மனதில் சூழ்ந்து கொள்ளும்.
ரிஷபம்:
தவிக்கும் போது உதவி பலரும் முன்வருவார்கள். உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், குடும்பத்தார் என பலரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழிலில் அதிக கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்கள், சண்டைகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
உங்கள் பணி மீதான அங்கீகாரத்தால் பெருமை கொள்வீர்கள். உங்களின் எதிர்கால நன்மைக்கான் முன்னோட்டம் நிகழலாம். கோயில், வழிபாடு மீதான நாட்டம் மேலோங்கும். குடும்பத்துடன் வெளியே சென்று மகிழ்வீர்கள்.
கடகம்:
உடன் பணியாற்றுவோரிடம் பரிவு காட்டுவீர்கள். அவர்களை அரவணைத்து செல்வீர்கள். வீண் வாக்குவாதங்களால் முறிந்து போன நட்பு, மீண்டும் சேரும். உணவை கனமாக தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிம்மம்:
உங்கள் முடிவுகள் கடும் எதிர்ப்பை சந்திக்கும். பிள்ளைகள், கணவன், மனைவி கூட உங்கள் பேச்சை ஏற்க மறுப்பார்கள். அதற்காக அவர்களிடம் சண்டையிட வேண்டாம். ஆன்மீக நாட்டம் பலன் தரலாம். வரவிருக்கும் சுப நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவீர்கள்.
கன்னி:
பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஊக்கம் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் பாராட்டை பெறும். பலரும் உங்களை பின்தொடர்வார்கள். பெற்றோர் உடல்நிலையில் கவனம் வேண்டும். பிக்பாக்கெட் அபாயம் உள்ளது. கவனாக பயணிக்கவும்.
துலாம்:
நினைத்தது நடக்கும். நடப்பதை நினைத்து மகிழ்வீர்கள். கணவர் , மனைவி அன்பாக இருப்பார்கள். உடல் நலனில் சின்ன சின்ன குறைபாடுகள் ஏற்படலாம். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்:
இருந்த இடத்திலிருந்து உயர்வு காண்பீர்கள். உங்கள் பணி போற்றப்படும். நல்ல முயற்சிகள் பலன் தரும். உங்கள் கீழுள்ள பணியாளர்கள் உங்களை கண்டு வியப்பார்கள். மேலுள்ள பணியாளர்கள் பாராட்டுவார்கள். ஆனாலும், பணப்பிரச்சனை ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்து கொண்டிருக்கும்.
தனுசு:
இல்லம் முழுதும் இன்பம் பொங்கும். குடும்பத்தாரை மகிழ்வித்து மகிழ்வீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் வரலாம். தொலைபேசி வலி சுபச் செய்திகள் வரலாம். நட்பு வட்டாரத்தில் இருந்து சந்திப்பு அழைப்புகள் வரலாம். குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும்.
மகரம்:
நலம் காணும் நாள் இன்று. கடந்த சில நாட்காக இருந்த காய்ச்சல், இருமல் , சளி உள்ளிட்ட உபாதைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். உங்கள் பணி மீதான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அருமையை அறிவார்கள். குடும்பத்தார் மிக நெருக்கமாக இருப்பார்கள்.
கும்பம்:
தொட்டதெல்லாம் வெற்றி காணும் நாள். தேர்வு முடிவுகள், குலுக்கல் முடிவுகள், லாட்டரி முடிவுகள் போன்றவை மகிழ்வை தரும். வீட்டில் இன்று புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும் நாள் இன்று.
மீனம்:
நிம்மதியான சூழல் நிலவும். கடன் தொல்லைகள் விலகும். பெரிய ஆபத்து வந்து பனிபோல் விலகும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. சமரசங்கள் தீர்வு தரும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்