Rahu Ketu Peyarchi: 2022-2023 ஆம் ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி எப்போது? இதோ முழு விபரம்!
Rahu Ketu Peyarchi 2022 Date and Time: ராகு- கேது அசுபமான கிரகங்களாகக் கருதப்பட்டாலும், சில சூழ்நிலைகளில் சிக்கலான மற்றும் வண்ணமயமானதாக மாற்றக்கூடியதாகவும் ராகு கேது பெயர்ச்சி பார்க்கப்படுகிறது.
Rahu Ketu Peyarchi 2022: ஜோதிடத்தில் ராகு எதையும் அனுபவிக்கச் சொல்லும். ஆனால் அதே சமயம் கேது உண்மையான ஞானத்தைப் பெற வழியைத் தேட முயற்சிக்கும் எனக்கூறப்படுகிறது. இந்தாண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 12.
ஜோதிடத்தின் படி, நிழல் கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு - கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்கி (18 மாதங்கள்) அந்த ராசிக்குரிய அதிபதி கொடுக்கக்கூடிய பலனை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு சேர்க்கக்கூடிய மற்ற கிரகங்களைப் பொருத்தும் அதற்கானப் பலன்கள் சிறியளவில் மாறுபடும் எனக்கூறப்படுகிறது. மேலும் ராகு- கேது அசுபமான கிரகங்களாகக் கருதப்பட்டாலும், சில சூழ்நிலைகளில் சிக்கலான மற்றும் வண்ணமயமானதாக மாற்றக்கூடியதாகவும் ராகு கேது பெயர்ச்சி பார்க்கப்படுகிறது.
இதோடு மட்டுமின்றி பொதுவாக ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலக்கட்டத்தை நாம் ராகு – கேது பெயர்ச்சி என்கிறோம். ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்தாண்டிற்கான அதாவது 2022 ஆம் ஆண்டிற்கான ராகு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. செவ்வாய்கிழழை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடம் பெயர்ச்சி அடைகிறார்.
இதனால், பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என சொல்லப்படுகிறது. மேலும் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விஷேசமானது.
காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும், ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களைத் தரும் என்று ஐதீகம்.
2022 ஆம் ஆண்டிற்கான ராகு, கேது பெயர்ச்சி நேரம்:
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்.
ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராகு கேது பெயர்ச்சியால், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையும் எனக்கூறப்படுகிறது.