மேலும் அறிய

சிம்மத்தில் புதன் வக்கிரம்.. ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? 12 ராசிக்கும் பலன்கள்!

சிம்மத்தில் புதன் வக்கிரம் அடைந்துள்ளதால் 12 ராசிக்கும் நடக்க போகும் மாற்றங்களை கீழே விரிவாக காணலாம்

 மேஷ ராசி

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றுக்கும் ஆறுக்கும் அதிபதியான புதன் சிம்மத்தில் வக்கிரம் பெறுவது  மிகப்பெரிய யோகத்தைக் கொண்டு வரும்  ஆறாம் அதிபதி ஆறாம் வீட்டிற்கு பதினொன்றாம் வீடான  சிம்மத்தில் இருந்து கடகத்தை நோக்கி புறப்படுவது உங்களுக்கு எதிரியை வெல்லக்கூடிய சக்தியை கொடுக்கும்.  படுத்த படுக்கையாக நீண்ட நாட்களாக இருப்பவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களை உடையவர்களுக்கு தற்போது குணமாக வாய்ப்பு உண்டு.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் பெரிய அளவுக்கு தனபாக்கியம் உண்டாகும்.

 ரிஷப ராசி

 அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியுமான புதன் நான்காம் வீட்டில் வக்கிரம் பெறுவது மிகப்பெரிய தைரியத்தையும் வீரியத்தையும் உங்களுக்கு கொண்டு வரும்.  எந்தெந்த காரியங்கள் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கி இருந்தீர்களோ அந்த காரியங்களை  ஜெயமுடன் முடிப்பதற்கான காலகட்டம் தான் இது.  வக்ர கிரகங்கள் மிகப்பெரிய பலத்தை உடையவை.  ஆகையால் குடும்ப ஸ்தானத்தை பலப்படுத்துவார் தன வருவாயை உயர்த்துவார் உங்களுடைய  புகழை மேம்படுத்துவார்.

 மிதுன ராசி

 

 அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே ராசி அதிபதி மூன்றாம் பாவத்தில் வக்கிரம் பெறுவது  நிலம் தொடர்பான யோகங்களையும் வாகன யோகத்தையும் கொண்டுவரும். ஏற்கனவே நான்காம் இடத்தில் கேது இருந்து வீட்டை மாற்ற வைத்திருப்பார் அல்லது வேறு இடத்திற்கு குடி பெயர் வைத்திருப்பார். அப்படியும் இல்லாத இருந்தால் கடந்த ஒரு வருடத்தில் வாகனம் தொடர்பான ஏதேனும் ஒரு சின்ன சிக்கல்களை கொடுத்து விட்டு பின்பு நிவர்த்தியை கொடுத்திருப்பார்.  இப்படியாக நிலம் இடம் தொடர்பான சிக்கல்களை சந்தித்து வந்தவர்களுக்கு தற்போது புதன் வக்கிரத்தின் பலன்கள் பிரமாதமாக இருக்கிறது.  நினைத்ததை நிறைவேற்றக்கூடிய காலகட்டம் வம்பு வழக்குகள்  போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் கேஸ் போன்றவை சாதகமாக முடியும்.

 

 

 

 கடக ராசி

 

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் புதன் வக்கிரம் பெறுகிறார் 12 ஆம் அதிபதி வக்கிரம் பெறுவது  நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொண்டு அதன் மூலம் ஆதாயத்தை கொடுக்கும்.  தூக்கம் வராமல் ஏதோ சிந்தனையிலேயே காலம் தள்ளியவர்களுக்கெல்லாம் தற்போது நல்ல உறக்கம் வரும்.  கடகத்திற்கு மூன்றாம் அதிபதி ஜெயத்தின் அதிபதி ராசியை நோக்கி வக்கிரம் பெற்று வருவது உங்களுக்கு  எடுத்த காரியங்களில் வெற்றியை தரப் போகிறார்.

 

 

 சிம்ம ராசி

 

 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே 11 ஆம் அதிபதி உங்கள் ராசியிலேயே வக்கிரம் பெறுவது சிறப்பை தான் கொண்டுவரும் குறிப்பாக 12 ஆம் இடமான மோட்ச ஸ்தானத்தில் புதன் பயணிப்பது உங்களுடைய ஆன்மீக அறிவை விஸ்தாலப்படுத்தும்.  கடவுளின்  அருள் உங்களுக்கு கிடைக்கும்.  நான் அதிர்ஷ்டமற்றவன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று சதா புலம்பி கொண்டு இருந்தவர்கள் கூட தற்போது மன தைரியத்தோடு வாழ்க்கையில் போராட வேண்டும் என்று தெளிவு பெறுவார்கள்.  தொழில் ரீதியான சிக்கல்களை சந்தித்து வந்தவர்கள் கூட தற்போது நல்ல வேலையில் அமரப் போகிறார்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள்.

 

 

 கன்னி ராசி

 

 அன்பார்ந்த வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் சிம்மத்தில் புதன் வக்ர நிலையை அடைவது ராசி அதிபதி பின்னோக்கி செல்வதற்கு சமம்.  அப்படி என்றால் நீங்கள் தற்போது இடத்திற்கும் ஏதோ ஒரு முடிவை மாற்ற போகிறீர்கள் அல்லது மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட போகிறீர்கள்.  பணவரவு என்பது உங்களுக்கு நன்றாக இருக்கும் காரணம் பத்தாம் அதிபதி பனிரெண்டாம் வீட்டில்  வக்கிரம் பெற்று 11 நோக்கி நகர்வது  சில ஆயிரங்களில் சம்பாதித்தவர்களை கூட கோடிகளில் பொருளை வைக்கும் திடீர் தனயோகத்தை கூட கொண்டு வரலாம்.  நீண்ட நாட்களாக நடக்க வேண்டும் என்று இருந்தவை எல்லாம் நடக்கப் போகிறது.

 

 

 துலாம் ராசி

 

 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புதன் பதினொன்றாம் இடத்தில் இருந்து வக்கிரம் பெற்று 10-ஆம் இடத்தை நோக்கி போகிறார் நிச்சயமாக வேலை மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி காதுகளுக்கு வரும்.  ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு சென்று வேலை நிமித்தமாக இருப்பது.  அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டும் என்று நினைப்பது போன்றவை எல்லாம் வெற்றிகரமாக முடியும்.  பனிரெண்டில் கேது இருக்கிறது நிம்மதியான உறக்கம் இல்லை என்று நினைப்பவர்கள் கூட 12 ஆம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் வக்கிரம் பெரும்போது நல்ல தூக்கத்தையும் கவலையின்மையும் பிரச்சனைகள் போவதையும் காட்டும்.

 

 

 விருச்சக ராசி

 

 அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பத்தாம் வீட்டில் புதன் வக்கிரம் பெறுகிறார் அவர் போகும் இடம் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் வியாபாரத்தில் முதலீடு போட்டு இருக்கிறேன் ஆனால் பெரிய அளவு லாபம் இல்லை அதேபோல தொழிலில் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் உழைப்புக்கேற்ற பலன் இல்லை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த விருச்சக ராசி அன்பர்களே  தற்போது தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய அனைத்தும் வெற்றியை நோக்கி பயணிக்கும். தற்போது போடப் போகின்ற புதிய முதலீடுகள் எல்லாம்  பெரிய லாபத்தைத் தான் கொண்டு வரும்.  திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.  நல்ல முன்னேற்றமான காலகட்டம் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 

 தனுசு ராசி

 

 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பெரிய அளவில் புதன் கை கொடுக்கப் போகிறார் காரணம் ஒன்பதாம் வீட்டில் புதன் வக்கிரம் பெற்று  திடீர் அதிர்ஷ்டத்தின் வீடான எட்டாம் வீட்டை நோக்கி பயணிக்கிறார் இது உங்களுக்கு  பிரிய தன பாக்கியத்தை கொண்டுவரும் காரணம் எட்டாம் வீடு என்பது அடுத்தவர் சம்பாதிக்கக்கூடிய பணம், அந்தப் பணம் உங்கள் கைகளில் வரவேண்டும் என்றால் எட்டாம் பாவத்தில் எதுவும் சிறப்பான கிரகங்கள் இருந்தே ஆக வேண்டும் அந்த சூழ்நிலையில் ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியுமான புதன்  வக்கிர நிலையில் எட்டாம் வீட்டை நோக்கி பயணிப்பது  வாடிக்கையாளர்களை நம்பி தொழில் பண்ணும் வியாபாரிகளுக்கு பிரமாதமான காலகட்டம் .  அதேபோல  பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடு பதினொன்றாம் வீடாக வருவதால்  தொழில் ரீதியான எந்த காரியங்கள் எடுத்தாலும் அதில் வெற்றியைத் தான் பெறப் போகிறீர்கள்.

 

 

 மகர ராசி

 

 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அஷ்டமத்தில் சென்று கொண்டிருந்த புதன் வக்கிரம் பெற்று ஏழாம் வீட்டை நோக்கி பயணிக்கிறார் இது அதிர்ஷ்டத்தின் காலம் அஷ்டமத்தில் மறைந்த புதன் நிறைந்து பலன்களை ஏழாம் வீட்டில் இருந்து தரப் போகிறார்.  மகர ராசி பொருத்தவரை ஒன்பதாம் அதிபதியும் ஆறாம் அதிபதியும் அஷ்டமத்தில் வக்கிரம் பெறுவது நீண்ட நாட்களாக யாருக்குமே தெரியாமல் இருந்த மர்ம நோய்கள் கூட  தற்போது இந்த காலகட்டத்தில் விலக வாய்ப்பு உண்டு.  உங்களைப் பற்றி தரகுறைவாக பின்னால் பேசியவர்கள் கூட  மனம் மாறி உங்களிடத்தில் வந்து  ஒப்புரவு ஆக வாய்ப்புண்டு.  தனுஷ் தானத்தை பொருத்தவரை  ஆரம்பத்தில் சற்று தாமதமான பலன்களை கொடுத்தாலும் முடிவில்  நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

 

 

 கும்ப ராசி :

 

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புதன் எட்டாம் அதிபதியும் ஐந்தாம் அதிபதியும் ஆகி ஏழாம் வீட்டில் வக்கிரம் பெற்று ஆறாம் வீட்டை நோக்கி வருகிறார்  கடன்கள் அதிக அளவு இருக்கிறது கடன்காரர்கள் கழுத்தை நிற்கிறார்கள் என்று இருந்தவர்களுக்கெல்லாம் தற்போது  கடன் சுமை குறைவதற்கான காலகட்டம்.  வியாபாரத்தை விரிவுபடுத்த போகிறீர்கள் உங்களுக்கு ஊரில் ஒரு கிளை இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் மற்றொரு கிளை வேறு ஒரு இடத்தில் துவங்க வாய்ப்புண்டு.  பல நாட்களாக என்ன பிரச்சனை என்று தெரியாமல் இருந்த உங்களுக்கு உங்களை சுற்றி நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் தற்போது புலப்பட போகிறது.  வீட்டில்  விருந்தினர்களின்  வரவு அதிகரிக்கும்.

 

 

 

 மீன ராசி

 

 அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான புதன் ஆறாம் வீட்டில் வக்கிரம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டை நோக்கி வருகிறார்.  அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாயில் கதவை தட்டுகிறது.  புகழின் ஸ்தானமான ஐந்தாம் பாவத்தில் புதன் வக்கிரம் பெற்று வருவது உங்களைப் பற்றி அடுத்தவர்கள் உயர்வாக பேசக்கூடும்.  குறிப்பாக உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்தவர்கள் கூட தற்போது புரிந்து கொண்டு உங்களிடம் வந்து சேருவார்கள்.  சிறுக சிறுக பணத்தை சேர்த்து முதலீடு செய்தால்  தற்போது அதிக லாபம் ஈட்டுவதற்கான காலம்.  கணவன் மனைவி தம்பதிகளுக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தற்போது ஆறாம் வீட்டில் இருந்து விலகி ஐந்தாம் வீட்டை நோக்கி வருவதால் சண்டை சச்சரவுகள் விலகி சமாதானமாக போகக்கூடிய காலகட்டம்.  உங்களுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடித்தளத்தை தற்போது போடப் போகிறீர்கள்.  தன வரவு உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி  பொங்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget