Navratri 2022: நவராத்திரி பண்டிகை: தேதி, நேரம், முக்கியத்துவம் மற்றும் விரத உணவுகள்.
Navratri 2022 Date Time: நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 26, 2022 இல் தொடங்கி அக்டோபர் 5, 2022 அன்று முடிவடைகிறது.
Navratri 2022 Date and Time: இந்தியாவில் பிரமாண்டமான பண்டிகைக் காலமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 26, 2022 இல் தொடங்கி அக்டோபர் 5, 2022 அன்று முடிவடைகிறது. ஒன்பது நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் நவராத்திரி ,துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது 'ஒன்பது இரவுகள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் இரண்டு பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.
சைத்ர நவராத்திரி, வசந்த காலத்தில் வருகிறது மற்றும் சரத் நவராத்திரி இந்தியாவில் இலையுதிர் காலத்தின் வருகையைப் பின்பற்றுகிறது. ஷரத் (அல்லது ஷரதியா) நவராத்திரியும் சைத்ரா நவராத்திரியின் அதே மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறது.
ஷரத் நவராத்திரி 2022: தேதி மற்றும் பூஜை நேரங்கள்:
பிரதிபத திதி ஆரம்பம் - செப் 26, 2022 அன்று அதிகாலை 03:23
பிரதிபத திதி முடியும் - செப் 27, 2022 அன்று அதிகாலை 03:08
நவராத்திரியின் போது செய்யக்கூடிய பலவிதமான சிறப்பு உணவுகள் உள்ளன.
ஷரத் நவராத்திரி 2022 ன் முக்கியத்துவம் மற்றும் விரத சடங்குகள்:
செழிப்பு மற்றும் வெற்றிக்காக துர்கா தேவியை தினமும் வழிபடுகிறார்கள். சிலர் தேவியின் சிலையை ஆராதனை செய்து, தினமும் பால், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றைப் படைக்கிறார்கள் .
பத்தாம் நாள், விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் அசைவ உணவுகள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கவழக்கங்கள். திருவிழாவின் போது இலகுவான, சாத்வீக உணவைப் பின்பற்ற வேண்டும். சில பக்தர்கள் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பார்கள்.
பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய விரத சடங்குகள் குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால், உங்களுக்காக சில முக்கியமானவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
நவராத்திரி விரத சடங்குகள் மற்றும் சமையல்:
1. மாவு, மற்றும் தானியங்களைத் தவிர்க்கவும் .
பொதுவாக விரதம் இருப்போர் பால் பழம் ஆகியவற்றை உண்டு நாள் முழுதும் விறகு விரதம் இருப்பார்கள் இதுதான் சரியான முறை எனவும் கூறப்படுகிறது. மாவு உணவு ,அரிசி மற்றும் காய்கறி வகைகளை தவிர்த்து மன ஒருமைப்பாட்டுடன் விரதம் இருக்க வேண்டும்.
மேலும், விரத காலத்தில் தாமரை பூவில் இருந்து பெறப்படும் தாமரை விதை போன்றவற்றை உண்ணலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.
2. ராக் சால்ட் வைத்திருங்கள்
ராக் உப்பு ( செந்தா நாமக் ) வழக்கமான டேபிள் உப்புடன் ஒப்பிடும்போது குறைவாகவே பதப்படுத்தப்படுகிறது. செந்தா நாமக் என்பது அதிக அளவு சோடியம் குளோரைடு இல்லாத மிகவும் படிக உப்பு ஆகும். எனவே ஒருவர் தங்கள் விரத சிறப்பு உணவுகளில் கல் உப்பு பயன்படுத்தலாம்.
3. குறிப்பிட்ட சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தவும்
விதை அடிப்படையிலான எண்ணெய்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தவிர்க்கப்படுகிறது. சமையலுக்கு நெய் மற்றும் கடலை எண்ணெய் பயன்படுத்தலாம்.
4. பால் பொருட்கள் .
பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களை நவராத்திரியின் போது சாப்பிடலாம்.
5 தவிர்க்க வேண்டிய மற்ற உணவுகள்
மாவால் செய்யப்பட்ட உணவு, தானியங்கள் மற்றும் வெங்காயம், பூண்டு மற்றும் பருப்பு ஆகியவற்றை ஒருவர் தவிர்க்க வேண்டும். இந்த பண்டிகையை முயற்சிக்க ,சிறந்த நவராத்திரி உணவுகளை, சிறந்த முறையில் குறிப்பிட்ட பதார்த்தங்களுடன் செய்து நவராத்திரியை கடைபிடிக்கலாம்