மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்ககூரணி விநாயகர் சதுர்த்தி விழாவை நேரலையில் காண ஏற்பாடு !
மதுரை மீனாட்சியம்மன் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவை இணையம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. இதனால் விநாயகா் சிலை வடிவமைப்பாளா்கள் பாதிக்கப்பட்டனா். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில் கொரானா கட்டுப்பாடுகள் எதிரொலியாக உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தர்கள் வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் அம்மன் சன்னதியை ஒட்டியுள்ள முக்கூரணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி முக்கூருணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு முக்கூருணி விநாயகர் சன்னதியில் கொழுக்கட்டை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நெய் வேத்தியம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இதனை பக்தர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10.30 முதல் Www.tnhrce.gov.in, Www.maduraimeenakshi.org மற்றும் YOUTUBE-ல் maduraimeenakshi என்ற பக்கத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுகிறது. பல மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வழக்கம்போல் இல்லாமல், வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன், விநாயகர் சிலைகள் வைத்து கோலகலமாக கொண்டாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் இணையம் வழியாக பார்வையிட ஏற்பாடு செய்தற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion