Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: டிசம்பர் 19ம் தேதி செவ்வாய் பகவான் சுக்கிரனுக்குச் சொந்தமான பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். 4 ராசிகள் என்னென்ன எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் நவகிரகங்களில் முதன்மையான தைரியம், வீரம், துணிச்சல் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் முக்கிய கிரகமாக விளங்குகிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் 19ம் தேதி செவ்வாய் பகவான் சுக்கிரனுக்குச் சொந்தமான பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.
செவ்வாயும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்குச் சாதகமான பலன்களை கொடுக்கப்போகிறது. அந்த 4 ராசிகள் என்னென்ன எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி பல்வேறு வகைகளில் சாதகமான மாற்றங்களைக் கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாராத வழிகளில் பணவரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கலாம். தங்களுடைய திறமைகளை நிரூபிப்பதற்கான புதிய வாய்ப்புகளும் தேடி வரலாம். இதனால் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். தொழிலை விரிவுபடுத்தவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் இது ஏற்ற காலம். பொருளாதார ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையக்கூடும். இருப்பினும், புதிய முதலீடு செய்யும் போது கவனம் தேவை.
இதையும் படிங்க: Venus Transit: சுக்கிரன் அருளால் ஜொலிக்கப்போகும் 7 ராசிகள்! குவியப்போகும் செல்வம்! லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க?
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்தச் செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோருக்கும், புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய வருமான வழிகள் பிறக்கும். குடும்பத்தில் சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சூழல் உருவாகக்கூடும். கடந்த காலங்களில் கடினமாக உழைத்தவர்களுக்கு அதற்கான அங்கீகாரமும் பலன்களும் கிடைக்கத் தொடங்கலாம். பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படாமல் யோசித்து செயல்பட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய உச்சத்தை அடையும் காலகட்டமாக இருக்கப்போகிறது. குறிப்பாக, நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்களுடைய உழைப்பிற்கும் திறமைக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் சாதகமான வாய்ப்புகள் அமையக்கூடும். இதனால் எதிர்காலம் குறித்த நம்பிக்கை அதிகரிக்கலாம். இருப்பினும், முக்கியமான தொழில் முடிவுகளை எடுக்கும்போது நன்கு திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்க நினைத்தவர்களின் எண்ணங்கள் ஈடேறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். வெளிநாட்டு வேலை முயற்சிகளுக்கு நல்ல பதில் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த கடன் சுமைகளைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கும் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















