மேலும் அறிய

Venus Transit: சுக்கிரன் அருளால் ஜொலிக்கப்போகும் 7 ராசிகள்! குவியப்போகும் செல்வம்! லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க?

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தில் நல்ல விஷயங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். இதன் காரணமாக 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப்போகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் காதல், திருமணம், அழகு, மகிழ்ச்சி, கலை, சொத்து, செல்வம் மற்றும் பொருள் சார்ந்த சுகபோகங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சரிக்கும் போது, தனிப்பட்ட உறவுகள், நிதி நிலைமை மற்றும் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.

அந்த வகையில், வரும் நவம்பர் 6 சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நடக்கும் இந்த முக்கிய சுக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பாக 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப்போகிறது. அவை எந்தெந்த ராசி மற்றும் எது மாதிரியான பலன்களை கொடுக்கப்பபோகிறது என்பதை பார்க்கலாம். 

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு நன்மைகளை தரப்போகிறது. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியால் படிப்பில் அசத்துவர். கலைத்துறை மற்றும் படைப்பாற்றல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பாராட்டுகளும் குவியும். அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு குடும்பத்திலும் நிதி நிலைமையிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது. முக்கிய பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் கையொப்பமிடும் முன் முழுமையாக சரிபார்ப்பது ரொம்ப நல்லது. வீட்டை புதுப்பித்தல் அல்லது புதிய சொத்துக்கள் வாங்க இது தான் சரியான நேரம். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். 

கடகம்

கடக ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் பொன்னாகும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்குத் தகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஊடகம், எழுத்து, மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சகோதர்களுடனான உறவு மேம்படும்.

இதையும் படிங்க: Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருள் பண வரவை கணிசமாக உயர்த்தும். திடீர் பண வரவால் நிதி நெருக்கடிகள் விலகி சந்தோஷமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். கையில் பணம் புழங்கினாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். 

துலாம்

துலாம் ராசிக்கும் சுக்கிரனே அதிபதி என்பதால், இந்த பெயர்ச்சியால் வியாபாரத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாபெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்ப உறவுகள் பலப்படும். புதிய திட்டங்களை தொடங்கும் முன் ஏற்கனவே உள்ள வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் ஈடுபட்டுள்ள துலாம் ராசியினருக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை சேரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு சுக்கிர பெயர்ச்சி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியை அளித்தரப்போகிறது.  
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழில் திட்டங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். பழைய தொழில்முறை நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முன்பு செய்த முதலீடுகள் மூலம் தற்போது நல்ல லாபம் உண்டாகும்..

மகரம்

கன்னி ராசியில் நிகழும் சுக்கிரப் பெயர்ச்சி மகர ராசியினருக்கு ஆன்மீக மற்றும் தொழில் ரீதியான உயர்வைத் தரும்.  அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் ஆலோசனைகள் தொழில் மற்றும் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், வெளிநாட்டுப் பயணம் செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி தேடி வரும்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகாலை 6 மணி காட்சிகள்...தவெக அரசு அனுமதி
மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகாலை 6 மணி காட்சிகள்...தவெக அரசு அனுமதி
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Embed widget