மேலும் அறிய

அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!

Anbil Mahesh Case: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய வழக்கில் சுமார் 3 அரை மணிநேரம் காரசார வாதம் நடைபெற்றது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதற்காக 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11 நாட்களாக புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஷின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, இன்று ஜாமீன் கோரிய அவரது மனு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பொய் சொல்லி வசூலித்த அரசகுமார்

அப்போது, அரசகுமார் பணம் வசூலித்ததாக பதியப்பட்ட வழக்கை போலீசார் மாற்றியுள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருக்கும்போது, குழப்பத்தை ஏற்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர் என்று அன்பில் மகேஷ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி, அரசகுமார் 100 கோடி ரூபாய் பணம் வசூலித்துள்ளதாக குற்றம்சாட்டினர். மேலும், முதலில் 100 கோடி என்று கூறியவர்கள், தற்போது 800 கோடி என உயர்த்தியுள்ளதாகவும் அன்பில் மகேஷ் தரப்பு வாதிட்டது.

ஒருபோதும் ஆதாரங்களை கலைக்கமாட்டார்

அதோடு, வழக்கின் விசாரணைக்கு போலீசார் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மகேஷ் பதிலளித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், அரசகுமார் பொய் சொல்லியிருந்தால் அன்பில் மகேஷ் என்ன செய்ய முடியும்? அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்களின் வாக்குமூலத்தை வைத்து அன்பில் மகேஷை போலீசார் கைது செய்துள்ளதாகவும், லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவர்களை ஏன் கைது செய்யவில்லை எனவும் அன்பில் மகேஷ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.  இறுதியாக, அன்பில் மகேஷ் எங்கும் தப்பிச்செல்ல மாட்டார், ஒருபோதும் ஆதாரங்களை கலைக்கமாட்டார். ஆகையால் அன்பில் மகேஷிற்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விஞ்ஞான ரீதியில் ஊழல்

இதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில்: அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்வு செய்த லஞ்சம் வாங்கியுள்ளனர். அரசகுமாரும், முத்துக்குமாரும் சங்கம் வைத்து லஞ்சம் வசூலித்துள்ளனர். மேலும், ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து பள்ளி உாிமையாளா்களான புகாா்தாரா்களுக்கு தொியாது.விஞ்ஞான ரீதியிலான ஊழல் நடந்துள்ளது. அது பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்து உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அன்பில் மகேஷ் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தனது வாதத்தில் தெரிவித்துள்ளது. 

ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு

அன்பில் மகேஷ் வீட்டிற்கு சரவணன் பணம் கொண்டு சென்ற வீடியோ ஆதாரம் உள்ளதாகவும், சரவணன் தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும், 3 நாட்கள் அன்பில் மகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவரிடம் அது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. முத்துகுமார் சரணடைந்ததன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. முத்துகுமாரை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டும். முத்துகுமார் குறித்தும் அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மீண்டும் புழல் சிறையில் அன்பில்

இதனையடுத்து அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் பணம் எடுத்துச் சென்ற வீடியோ ஆதாரத்தை சமர்பிக்க முடியுமா? என் வீட்டிற்கு பணம் கொண்டு சென்றதாக வீடியோ இருந்தால் வழக்கு முடியும் வரை ஜாமீன் வேண்டாம்.  வீடியோ ஆதாரத்தை போலீசார் சமர்பித்தால் ஜாமீன் மனுவை திரும்ப பெறுகிறோம் என வாதிடப்பட்டது. சுமார் 3 அரை மணிநேரம்  வாதம் நடைபெற்ற நிலையில், இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து, அன்பில் மகேஷ் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்... தட்டிக்கேட்ட நடத்துநருக்கு சரமாரி தாக்குதல்!
படிக்கட்டில் தொங்கியதை தட்டிக்கேட்ட அரசு பேருந்து கண்டக்டர்! ஆத்திரத்தில் மாணவர்கள் செய்த அதிர்ச்சி செயல் - வீடியோ வைரல்!
அழுகிய வெங்காயத்துக்கு இங்கு இடமில்லை! 400 டன் சரக்கை அதிரடியாக நிராகரித்த தமிழக அரசு: பின்னணி இதுதான்!!!
அழுகிய வெங்காயத்துக்கு இங்கு இடமில்லை! 400 டன் சரக்கை அதிரடியாக நிராகரித்த தமிழக அரசு: பின்னணி இதுதான்!!!
Onion Price: மழைக்கு பின் எகிறும் வெங்காயம்! கொட்டிக்கிடக்கும் தக்காளி! போட்டி போட்டு வாங்கும் மக்கள்.!
Onion Price: மழைக்கு பின் எகிறும் வெங்காயம்! கொட்டிக்கிடக்கும் தக்காளி! போட்டி போட்டு வாங்கும் மக்கள்.!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
Embed widget