மதுரை : மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருப்பணி : வல்லுநர் குழு 2 நாட்கள் ஆய்வு..
திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநில அளவிலான வல்லுநர் குழு இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்காக இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட மாநில அளவிலான வல்லுநர் 2 நாட்கள் கோயிலில் ஆய்வு மேற்கொள்கிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது.
#மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்காக இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட மாநில அளவிலான வல்லுநர் 2 நாட்கள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.#madurai | @UpdatesMadurai | @Act4madurai | @mani9726 | @SRajaJourno | @MaduraiNewsj | pic.twitter.com/3v6mWkr3vh
— Arunchinna (@iamarunchinna) June 6, 2022