மேலும் அறிய

Love: உங்கள் “காதல்” வெற்றியா? தோல்வியா? கட்டம் இப்படி இருந்தா கண்டிப்பா கைகூடும்!

ஜாதகத்தில் புதன், சுக்கிரன் இணைந்து இருக்கும் போது காதலிப்பவர்கள் அன்பாகவும், பாசமாகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்களாகவும் காதலில் சண்டையே வராதவர்களாகவும் இருப்பார்கள்.

1. புதனுடன் சூரியன் இணைந்தால்  காதலிப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்தே காதலித்துக் கொண்டிருப்பார்கள்.  புதன் சூரியன் இணைந்திருக்கும் ஜாதகர்கள் தங்கள் யாரை காதலிப்பார்கள் என்பது சமுதாயத்திற்கு தெரிந்தால் போலவே இருக்கும்.  தங்கள் காதலிக்கிறார்கள் என்பதை அவர்களாகவே அனைத்து நண்பர்களிடமும் உறவினர்களிடமும்  சமுதாயத்திடமும் தொடர்ந்து கூறி வருவார்கள்.  

மேலும் இந்த இணைவு கொண்ட ஜாதகர்கள் தங்கள் காதலைப் பற்றி பெருமையாகவும் சொல்ல ஆரம்பிப்பார்கள்.  முதலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்கள் காதலைப் பற்றி தந்தையாரிடம் கூறி அதற்கான சம்பந்தத்தை பெற்று இரு வீட்டார் சம்பந்தத்துடன்  காதலில் வெற்றி அடைவார்கள். 

2.  புதனுடன் சந்திரன்  இணைந்தால் அவர்கள் ரகசியமாக காதலிப்பார்கள்.  காதலித்துக் கொண்டிருக்கும் போதே கவிஞர்களாக மாறுபவர்களும் புதன், சந்திரன் இணைவை கொண்டவர்களே.  கைப்பட பல கடிதங்களை எழுதிக் கொடுப்பவர்களும்  இந்த இணைவை கொண்டவர்களே.  இவர்களின் காதலில் கவிதை விளையாடும் என்றே சொல்லலாம்.  புதன் சந்திரன் இணை உடையவர்கள் நிச்சயமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை உடையவர்களாக இருப்பார்கள் காதலில்.  காதலனாக இருந்தால் காதல் எப்படி இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வமும் ஆசையும் உடையவர்களாகவும்.  பெண்ணாக இருந்தால் தனக்கு வர வேண்டிய காதல் நீ எப்படி இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கற்பனையுடனும் ஏக்கத்துடன் இருப்பவர்களாக இருப்பார்கள்.  

கவிதையாய் பேசி காதலிப்பவர்களும் இந்த கிரக இணைவை உடையவர்கள்.  உன்னை பார்த்தால் நிலவைப் பார்த்தது போலிருக்கிறது.  உன் மீது வீசுகின்ற வாசம் பூந்தோட்டத்தைப் போலவும்  உன்னைப் பார்த்தால் ஆயிரம் சூரியன் போலவும் இருக்கும்.  இதுபோன்று கவிதைத்துவமாக காதலில் பேசுவார்கள் காதலியை மயக்குவார்கள்.  காதலிக்கும் பெண்ணின் கையை தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே என்று பாடல் வரிகளோடு காதலை ஆரம்பிப்பார்கள்.  

காதலன் காதலியை பார்த்து தஞ்சாவூர் செய்த பொம்மை இது பொம்மை இல்லை உண்மை என்று  அவர்கள் வெடிக்கும் வரிகளுக்கு மயங்காத காதலும் இல்லை, காதலியும் இல்லை.  இறுதியாக புதன் சந்திரன் இணைவு  பெற்றோரிடம் செல்லும் பொழுது தான் அது வெற்றி அடையுமா? அல்லது தோல்வி அடையுமா? என்று கூற வேண்டும்.  காரணம் புதன் சந்திரன் ஜாதகத்தில் இணைந்து இருந்தால் ரகசியமாக காதலித்து பின்பு பெற்றோரிடம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று மறைத்து வைத்திருக்கும் பொழுது,  அவர்களுக்கு அந்த காதல் வெற்றியா? தோல்வியா? என்று தெரியாத பட்சத்தில்  பெற்றோரிடம் செல்லும் பொழுது அவர்கள் திருமணம் வரை செல்வார்களா? இல்லையா? என்பதை சுய ஜாதகத்தில் பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். 

3.  புதனுடன் குரு இணைந்தால்  இந்த இணைவை கொண்டவர்கள்  பெற்றோருக்கு தெரிந்தது போலவே காதலில் ஈடுபடுவார்கள்.  பெற்றோர்களே இந்த காதலுக்கு பெரும்பாலும் சம்மதம் கொடுத்து விடுவார்கள்.  தாங்கள் யாரை காதலிக்கிறோம் என்ற தகவலை பெற்றோர்களுக்கு தெரிவித்து அதை திருமணம் வரை கொண்டு போய் சேர்ப்பார்கள்.  புதன், குரு எந்த ராசி கட்டத்தில் இணைந்திருந்தாலும்  அவர்களின் காதல் நிச்சயமாக வெற்றியை நோக்கியே நகரும்.  இந்த கிரக நினைவுக்கு மத்தியில் ராகு, கேதுகளோ அல்லது சனி, செவ்வாய் இல்லாமல் இருக்க வேண்டும்.  

புதன் குரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் மிகவும் டீசன்ட்டான காதலர்கள்.  காதலிக்கும் போது காதலன் எப்படி இருக்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி  உடை  அணிய  வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்பதில்  காதலர்கள்  மிகவும் கறாராக இருப்பார்கள்.  காதலிக்கும் போது, திருமணத்திற்கு பிறகு எப்படி வாழ வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை கணக்கு போட்டு காதலிப்பார்கள்.  இந்த காதல் நிச்சயமாக வெற்றி அடையும்.  புதன் குரு ஜாதகத்தில் இருப்பவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வார்கள்.

புதன், சுக்கிரன் இணைவோம் காதலும் !!!

ஜாதகத்தில் புதன், சுக்கிரன் இணைந்து இருக்கும் போது காதலிப்பவர்கள் அன்பாகவும், பாசமாகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்களாகவும் காதலில் சண்டையே வராதவர்களாகவும் இருப்பார்கள். அதிகப்படியான திரைப்பட பாடல்களை கேட்டு காதலிப்பவர்களும் புதன் சுக்கிரன் இணைவை கொண்டவர்களே. பேசும்பொழுது சினிமா பாடலை மேற்கோள் காட்டி நீ இப்படி இருக்கிறாய்? அப்படி இருக்கிறாய்? என்று சினிமா பாணியல் காதலிப்பவர்களும் புதன் சுக்கிரன் நினைவை கொண்டவர்களே.

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே  என்று காதலியை பார்த்து, உருகி உருகி காதலிப்பவர்களும் புதன் சுக்கிரன் இணைவை கொண்டவர்களே. புதன் சுக்கிரன் இணைவை கொண்டவர்கள் காதலில் வெற்றி அடைபவர்கள் ஆகும். இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதலிப்பவர்களாகவும் இருப்பார்கள்.  காதலிக்கும் ஆண் பெண்ணிடம் எதையுமே எதிர்பார்க்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.  நீ சம்மதம் தெரிவித்தால் மட்டும் போதும் என்று காதலிப்பவர்களாக இருப்பார்கள்.

 புதன் கிரகத்தோடு ராகு கேதுக்கள் :

 புதன் கிரகத்தோடு  ராகு கேது போன்ற கிரகங்கள் சேரும்போது காதலில் சிக்கல், காதலில் எதிர்ப்பு வேற்று மதத்தவரை இனத்தவரை காதலிப்பது போன்ற  சமுதாயத்திற்கு முரண்பாடான காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு.  புதன் ராகு சேர்க்கை சிலருக்கு காதல் கை கூடாமலேயே  போவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.  புதன் ராகு இருப்பவர்கள் அதிகமாக விழுந்து விழுந்து காதலிப்பவர்களாக இருப்பார்கள்.

புதன் கேது இருப்பவர்கள் காதலில் எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பதில் குறிக்கோளாக செயல்படுவார்கள்.  புதன், ராகு இருப்பவர்களுக்கு தங்கள் காதல் எங்கு சேராமல் போய்விடுமோ? என்ற பயம் கடைசி வரை இருக்கும்.  அதற்காகவே காதலர்கள் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதற்கான சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.  ஜாதகத்தில் புதன் ராகுவோ புதன் கேது உடலோ சுபகிரகமான குருவின் பார்வை சேர்க்கை இருந்தால் நிச்சயமாக அந்த காதல் திருமணத்தில் போய் முடியும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget