மேலும் அறிய

நான்காவது நாட்களாக விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! வரதரின் இன்றைய உற்சவம் என்ன தெரியுமா ?

வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாசம் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று சேஷ வாகனத்தில் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற திருக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக தொடங்கியது.
நான்காவது நாட்களாக விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! வரதரின் இன்றைய உற்சவம் என்ன தெரியுமா ?
 
நான்காம் நாளான இன்று காலை வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வாகன அலங்கார மண்டபத்தில் மல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நீலம், ரோஜா வண்ணத்துடனான வெண்பட்டு உடுத்தி பூதேவி மற்றும் ஶ்ரீதேவி உடன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது

நான்காவது நாட்களாக விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! வரதரின் இன்றைய உற்சவம் என்ன தெரியுமா ?
கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜா பெருமாள் ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆராதனை செய்தும் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி சிலை செல்லும் பகுதியின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
 
நான்காவது நாட்களாக விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! வரதரின் இன்றைய உற்சவம் என்ன தெரியுமா ?
 
வரதராஜ பெருமாள் கோயில் காஞ்சிபுரம்
 
வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலய மூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிப்பதாக பக்தர்கள் வழிபடுகின்றனர்

நான்காவது நாட்களாக விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்..! வரதரின் இன்றைய உற்சவம் என்ன தெரியுமா ?
அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில், போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?

Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?

எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா

Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!

TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு

காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?

Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்

Embed widget