மேலும் அறிய

Maasi Rasi Palan: மாசி மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது பற்றி காணலாம்.

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே,   மாசி  மாதத்தில்  பல ஏற்றமான பலன்கள் உங்களுக்கு நடைபெறப் போகிறது.  குறிப்பாக செவ்வாயின் பெயர்ச்சி  உங்களுடைய ராசிக்கு பலம் சேர்க்கப் போகிறது. உங்கள் ராசி அதிபதி செவ்வாய்  பத்தாம் பாவத்தில் உச்சம்பெறுவது தொழில் ரீதியான வெற்றிகளையும்.  நினைத்த காரியம் நிறைவேற்றும் சக்தியையும் கொண்டு  வரும். 

 ரிஷப ராசி:

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பல கிரகங்கள் அமர்கின்றன.  நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.  வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.  கோர்ட் கேஸ் என்று இழுத்து அடித்துக் கொண்டிருந்த காரியங்கள்  சாதகமாக  அமையும்.  மொத்தத்தில்  மாசி  மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகவே அமையப் போகிறது. 

 மிதுன ராசி :

எனக்கு அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு  ஏற்கனவே லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து உங்களுக்கு யோகங்களை கொண்டு வரப் போகிறார்.  பத்தாம் வீட்டில் ராகு இருக்கிறபடியால் ஒரு வேளைக்கு இரண்டு வேலை பார்க்க வேண்டி வரும்.  அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு.  செவ்வாய் ராசிக்கு எட்டாம் பாவத்தில் உச்சம் பெறுவதால் எதிர்பாராத தன வரவு உண்டு.  வழக்கில் வெற்றி நிச்சயம்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.  மொத்தத்தில் இந்த  மாசி மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகவே அமையப் போகிறது. 

 கடக ராசி :

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  மாசி மாதம்  நினைத்தது  நடக்கும்  மாதமாக தான்  இருக்கும். ராசிக்கு ஐந்தாம் அதிபதி பத்தாம் அதிபதி ஏழில் அமர்ந்து உச்சம் பெறுகிறார்.  கேந்திர ஸ்தானங்களில் அதிபதிகள், திரிகோண ஸ்தானங்களில் அதிபதிகள் ஆட்சி உச்சம் பெறும்போது  ஜாதகர் மிகப்பெரிய யோகத்தை அனுபவிப்பார் என்று சாஸ்திரம் கூறுகிறது.  

அப்படிப்பட்ட சூழலில் ஐந்தாம் அதிபதி  பத்தாம் அதிபதி ஏழாம் வீடான  கேந்திரத்தில் உச்சம் பெறுவது ஜாதகரை வலிமையானவராக மாற்றும்.  வாழ்க்கையில் எந்த சங்கடங்கள் வந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் திறக்கும்.  காதல் விவகாரங்கள் திருமணங்களில் முடியும். நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருந்த கடக ராசி வாசகர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.  வருகின்ற மாசி  மாதம் உங்களுக்கு ஒரு சுப மாதமாகவே அமையப் போகிறது.

சிம்ம ராசி :

எனக்கு அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே,  அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கும் பலருக்கு அரசு வேலை நிச்சயமாக கிடைக்கும்.  யாருடைய ஜாதகத்தில்  செவ்வாய் பலம் பெற்று இருக்கிறாரோ அந்த சிம்ம ராசி வாசகர்களுக்கு கோச்சாரத்திலும் சிம்மம் ஆறாம் வீட்டில் பலம் பெற்று திகழ்வதால்  வாழ்க்கைத் துணையின் ஆதரவு பெருகும் சமுதாயத்தில் மரியாதை உயரும்.  

உங்களுக்கென்று ஒரு  தனி வழி  உருவாக்கி  அதில்  பயணம் செய்ய ஆரம்பிப்பீர்கள்.  நண்பர்களிடத்திலோ வாழ்க்கைத் துணை இடத்திலோ பேசும்பொழுது வார்த்தையில் சற்று கவனமாக இருங்கள்.  சின்ன ஒரு விஷயம் கூட தீப்பொறியாக மாறி, தீப்பிழம்பாக  பிரச்சினையை பெரிதாக முடியும்.  மாசி மாதம் உங்களுக்கு பகையை வெல்லக்கூடிய மாதமாக இருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம். 

கன்னி ராசி :

 அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில்  செவ்வாய் உச்சம் பெறுகிறார்.  மூன்றாம் அதிபதி எட்டாம் அதிபதி, ஐந்தாம் பாவத்தில் உச்சம் பெறுவது  உங்களுடைய சொந்த ஊரில் இருக்கக்கூடிய விசேஷங்களுக்கு கலந்து கொள்ள போகிறீர்கள்.  நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் சுலபமாக முடியும்.  எதிர்பாராத தன வரவு உண்டு.  அதிர்ஷ்டங்கள் கை கூடும்.  வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து  நல்ல காரியங்களுக்கான அடித்தளத்தை  மாசி மாதத்தில் இடப்போகிறீர்கள்.  வாழ்த்துக்கள் வணக்கம். 

துலாம் ராசி:

அன்பான துலாம் ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு  ஏற்கனவே ஏழாம் பாவத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப் போகிறார்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.  திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில்  சுப காரிய  நிகழ்வுகள் நடைபெறும்.  உங்களை   உதாசீனப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பொலிவு கூடும்  சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.  புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்று  என்னிருந்தவர்கள் அதற்கான  அஸ்திவாரத்தை போடுவதற்கான நேரம் இது.  வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள். 

 விருச்சிக ராசி :

எனக்கு அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே,  மாசி  மாதத்தில் வெற்றி ஸ்தானத்தில் ராசி அதிபதி அமர்ந்து உச்சம் பெறுகிறார்.  நீண்ட நாட்களாக தள்ளிப்போன நல்ல காரியங்கள் உங்கள் கைகளை தேடி வரும் .  இளைய சகோதரரின் ஆதரவு கிடைக்கும்.  நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள்.  வழக்குகளில் வெற்றி பெற  போகிறீர்கள்.  எதையாவது சாதிக்க வேண்டும் என்று  எண்ணியிருக்கும் உங்களுக்கு சாதனை படைக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை.  மூன்று நான்கு ஆகிய பாவங்களை நல்ல கிரகங்கள் ஆக்கிரமிப்பதாக  வருகின்ற  மாசி மாதம் உங்களுக்கு ஏற்றமான மாதமே. 

 தனுசு ராசி :

எனக்கு அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இரண்டு மூன்று ஐந்து என்று  வரிசையாக  கிரகங்கள்  நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பதால்  இனிய காரியங்கள் அத்தனையும் நிறைவேறும். பொலிவு கூடும் சமுதாயத்தில் மரியாதை உயரும்.  உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி சென்றவர்கள் வேண்டும் என்று பேச வருவார்கள்.  உங்களுடைய வாக்கு புனிதமாகும்.  நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் அடுத்தவர்களால்  பாராட்டப்படும்.  புத்திர பாக்கியம் கிடைக்கும் நீண்டதொரு பிரயாணம் மேற்கொள்வீர்கள்  வாழ்க்கை துணையின் ஆதரவு கிட்டும் வாழ்த்துக்கள் வணக்கம். 

மகர ராசி :

 எனக்கு அன்பான மகர ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  செவ்வாய் லக்னத்திலேயே அமர்ந்து உச்சம் பெறுகிறார். நீங்கள்  என்ன காரியம் நினைக்கிறீர்களோ அதை இறைவன் செய்து கொடுப்பார்.  மே மாதத்திற்குள் இடம் மாற்றமோ அல்லது ஒரு சிறிய அளவிலான மாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு .  சனிக்கிழமை தோறும்  சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்டும். 

கும்ப ராசி:

எனக்கு அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய  ராசியிலேயே  சனி பகவான் அமர்ந்து ஜென்ம  சனியாய் வீற்றிருக்கிறார்.  மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் ஏழாம் வீட்டை பார்வையிடுவதால் நண்பர்களிடத்தில் சற்று கவனமாக இருங்கள். இருப்பினும் அனைவரும் உங்களுக்கு  சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.  ஜென்ம சனி ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு  அவ்வப்போது மற்ற கிரங்களால் நல்ல விஷயங்களை நடைபெறும்.  சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள் சங்கடங்கள் தீரும். 

 மீன ராசி :

எனக்கு அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதி 9ஆம் அதிபதி லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார் அப்படி என்றால்  மாசி மாதம் உங்களுக்கு ஒரு ஜாக்பாட் மாதமே.  மீன ராசிக்கு 11 ஆம் வீட்டில் பல கிரகங்கள் வந்து அமருகின்றன.  ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு நெய் தீபம் போட்டு வாருங்கள் சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பிறக்கும்.  

மீன ராசிக்காரர்கள் புதிய தொழில் தொடங்கலாம் அல்லது வேறு வேலைக்கு சென்று அதன் மூலம் அறிய இலாபத்தை சம்பாதிக்கலாம்.  ஏழரை சனியின் ஆதிக்கம் உங்களுக்கு இருந்தாலும் மீன ராசிக்கு சனி பகவான் லா பாதிபதியாகவும் வருவதால் அவ்வளவு பெரிய கெடுதல்களை செய்வதில்லை.  வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் வணக்கம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget