லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ அந்த வீட்டிலிருந்து ஏழாம் வீடு வரை ஒவ்வொரு வீட்டிலும் கிரகங்கள் அமர்ந்தால் அது கர்மயோகம் எனப்படுகிறது.
ஜனன ராசியிலிருந்து ஏழாம் ராசி வரை ஒவ்வொரு ராசியிலும் கிரகம் இருக்குமானால் அதாவது இடைவிடாது ஏழு ராசிகளிலும் கிரகங்கள் இருந்தால் அது கிரக மாலிகா யோகம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
அத்தகைய யோகம் பெற்றவர் வாழ்க்கையில் பல வகையான சுகங்களை அனுபவிப்பவராகவும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவராகவும், புண்ணிய செயல்களை செய்பவராகவும், செல்வம் நிறைந்த சீமானாகவும், அறிவாற்றல் நிறைந்தவராகவும் திறமையாக பேசுபவராகவும், உயர்கல்வி கற்று தேர்ந்தவர் ஆகவும், கௌரவமான குடும்பத்தில் பிறந்தவராகவும், எந்த காரியத்தை எடுத்தாலும் அதை வெற்றிகரமாக செய்து முடிப்பவராகவும், பலவகையான யோகங்களை பெற்றவராகவும் இருப்பார்.
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள் :
ஜனன லக்னத்திலிருந்து ஏழாம் வீடு வரை இடைவிடாது ஏழு வீடுகளிலும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் நற்குணங்கள் நிறைந்தவராகவும், இளமையிலும் 50 வயதிற்கு பிறகும் செல்வந்தராகவும், மத்திய வயதில் வறுமையில் வாடுபவர் ஆகவும் இருப்பார். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ அந்த வீட்டிலிருந்து ஏழாம் வீடு வரை ஒவ்வொரு வீட்டிலும் கிரகங்கள் அமர்ந்தால் அது கர்மயோகம் எனப்படுகிறது.
கர்மயோகம் ஜாதகருக்கு என்ன செய்யும் ?
கர்மயோகம் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராகவும், மற்றவர்களிடம் கலகலப்பாக பழகுவதற்கு தயங்குபவராகவும், எல்லாருக்கும் உதவி செய்பவராகவும் இருப்பார்.
சக்கரதார யோகம் என்றால் என்ன?
ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் முதல் ஆறாம் வீடு வரை ஒவ்வொரு வீட்டிலும் கிரகம் அமர்ந்திருந்தால் அது சக்கரதார யோகம் என்று குறிப்பிடப்படுகிறது. சக்கரதார யோகம் இருப்பவர்கள் ஒரு அரசனைப் போல வாழ்பவர் ஆகவும், ஆரோக்கியமான உடலை பெற்றவராகவும், எப்போதும் கோபம் இல்லாமல் அமைதியாக பேசுபவராகவும், கடவுளின் அனுக்கிரகம் பெற்றவராகவும், செல்வாக்கும் நிறைந்தவராகவும், எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவராகவும், புத்திசாலித்தனமாக பேசுபவராகவும், ஞான மார்க்கத்தை அறிந்தவராகவும் இருப்பார்.
பாசக யோகம் என்றால் என்ன ?
ஒருவருடைய ஜாதகத்தில் ஜனன ராசி முதல் தொடர்ந்து ஐந்தாம் ராசி வரை ஒவ்வொரு ராசியிலும் கிரகம் இருந்தால் அது பாசக யோகம் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் திரண்ட செல்வத்தைப் பெற்றவராகவும் பல முக்கிய விவரங்களை அறிந்து வைத்திருப்பவராகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் காணப்படுபவர் ஆகவும் பல நூல்களை கற்றறிந்து சிறப்பாக சொற்பொழிவு ஆற்றுபவர் ஆகவும், எல்லோரும் பாராட்டும் வகையில் வாழ்பவர் ஆகவும், அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராகவும், குடும்ப வாழ்க்கையில் போதிய கவனம் செலுத்துபவராகவும், நேர்மையாக நடந்து கொள்பவராகவும், உத்தம மார்க்கங்களை கடைபிடிப்பவர்களாகவும் இருப்பார்.
கேதார யோகம் என்றால் என்ன ?
ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம ராசியிலிருந்து நான்காம் ராசி வரை ஒவ்வொரு ராசியிலும் கிரகம் இருந்தால் அது கேதார யோகம் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட யோகம் இருக்கும் ஜாதகர்கள், பயிர் தொழில் புரிந்து அதன் மூலம் நிறைய பொருள் சம்பாதித்து பொருள் சேர்ப்பவராகவும், வாழ்க்கையில் சுகங்களை தாராளமாக அனுபவிப்பவர் ஆகவும், உறவினர்களிடம் இனிமையாக பேசுபவராகவும், சாமர்த்தியமும் புத்திசாலித்தனம் நிறைந்தவராகவும் இருப்பார்.
சூல யோகம் என்றால் என்ன ?
ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம ராசியிலிருந்து மூன்றாம் ராசி வரை ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் இருந்தால் அது சூல யோகம் என்று குறிப்பிடப்படுகிறது. சூல யோகம் இருக்கும் ஜாதகர்கள் நாளுக்கு நாள் செல்வத்தை பெருகுபவராகவும், எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுபவர் ஆகவும், இல்லற வாழ்க்கையில் மன நிறைவு கொண்டவராகவும்,பொருள்களை வாங்கி விற்பதில் அதிக லாபம் சம்பாதிப்பவராகவும் இருப்பார்.