மேலும் அறிய

Love Horoscope Today: இந்த வீக்ல உங்க லவ் எப்படி இருக்க போகுது.. லவ் ராசிபலனை ஜாலியா படிச்சு தெரிஞ்சுக்கங்க

Love Horoscope Today in Tamil, September 5th 2022: இந்த வாரத்தோட ஸ்டார்டிங்ல உங்க லவ் எப்படி இருக்க போகுதுனு தெரிஞ்சுக்க, ஜாலியா இந்த லவ் ராசிபலன படிங்க.

காதல பத்தி நீங்க என்ன நெனைக்கறீங்கனு தோழி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது.  ஒரு மேஜிக் ஷோ பார்க்கும் குழந்தை எப்படி மிகவும் ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியாக ஆடிப்பாடி துள்ளிக்குதிக்குமோ அது மாதிரி தான், காதலை எதிர்கொள்ளும் மனசும். அது இந்த பூவுலகில் ஆடிப்பாடி துள்ளிக்குதிக்கும். நான் சில ப்ரேக் அப்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் ப்ரேக் அப்பைச் சந்தித்து அதிலிருந்து மீள்கையில் மனதில் பதிவது புதிய காதல், புதிய உலகம், புதிய அனுபவம். இவற்றில் என்னைக் கடந்து சென்றவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் எப்போதும் என் நேசத்திற்குரியவர்கள். ப்ரேக் அப்களைச் சந்தித்தவர்கள் சொல்வது, "லவ்வெல்லாம் பாத்தாச்சு, அது போ...ர்" என இழுப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் அவர்கள் மனதில் இருப்பது காதலை முழுவதுமாக எதிர்கொண்டாகியாச்சு, காதலை முழுமையாக உள்வாங்கியாகிவிட்டது, காதலின் ஆழம் பார்த்தாகிவிட்டது என்பது மாதிரியான ஓர் சுவாரஸ்யமற்ற பதில் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காதலைப் பொறுத்தமட்டில், அது நாளுக்கு நாள் புதிது. காதலுக்கு காதல் காதலே புதிது. அப்படியான காதலை ஓர் வரையறைக்குள் எல்லைக்குள் கட்டமைக்கும் மனிதர்களை நான் பாவமாக பார்க்கிறேன் என்றார். 

மேலும் என் தோழி கூறியது, காதலை அவர்கள் சொல்வது போல் கடக்க முடியாது. மாறாக காதல் இயற்கையின் ஒரு துளி கிடையாது. அது ஒட்டுமொத்த இயற்கை. ஒட்டுமொத்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தை காதலில் கடப்பதென்பது பேராசை. ஆனால் காதல் கொண்டு பிரபஞ்சத்தை நிரப்புவது என்பது காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் செய்யவேண்டியது. இப்படி உலகம் குளிர காதல் செய்யுற உங்க காதல் வாழ்கையில இன்னைக்கு என்னனு ராசிக்கு ஏத்த மாதிரி தெருஞ்சுக்க இன்றைய லவ் ராசிபலனை படிங்க...
Love Horoscope Today: இந்த வீக்ல உங்க லவ் எப்படி இருக்க போகுது.. லவ் ராசிபலனை ஜாலியா படிச்சு தெரிஞ்சுக்கங்க

மேஷம்

நம்ம ஜூனியருக்கு எல்லாம் கல்யாணம் ஆகிட்டு இருக்கு, நமக்கு எப்போ கல்யாணம்னு உங்க ஆள் கேட்டா, விக்ரம் பட ஸ்டைல்ல "பாத்துக்கலாம்"னு சொல்லி அடிவாங்குவீங்க. இன்றைய நாள் உங்களுக்கு வாங்கி கட்டிக்கற நாளாகத்தான் இருக்க வாய்ப்பு அதிகம். 

ரிஷபம் 

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்னா எப்படி ஒரு ஆவல் இருக்குமோ, அந்த மாதிரி தான் இன்னைக்கு உங்க ஆள் உங்கள பாக்க ஆவலா இருப்பாங்க. ஹேப்பியான நாள். ஜாலியாக இருங்க. 

மிதுனம்

உங்க மொபைல் ரிங்டோன் என்னனு கூட தெரியாத உங்க லவ்வர நெனச்சு ஃபீல் பண்ணீட்டு இருப்பீங்க. உங்கள எப்பவும் போல இன்னைக்கும் காண்டேத்துவாங்க. உங்க லவ்வுல நீங்க மாஸ்ங்க. 

கடகம்

உங்க மேல எப்பவும் எக்கச்சக்க லவ்வோட இருக்க உங்க லவ்வருக்கு உள்ள இருக்குற அந்நியன இன்னைக்கு பாக்கறதுக்கான வாய்ப்பு பிராகாசமா இருக்கு. பொதுநல சேவை செய்யறேன்னு போயிட்டு உங்க அவுட் ப்ளேன டீல்ல விட்டுடு வாரு. அப்சட்டா போனாலும் திருப்தியான நாள். 

சிம்மம்

என்னப்பா அவுடிங் போலாமானு கேட்டா, லேட் ஆகிடும் சொல்லுவாங்க. சரி படத்துக்கு போலானு சொன்னா நோ சொல்லுவாங்க. வெளியவும் போகாம, உங்க ரெகுலர் ஒர்க்கும் செய்யாம, மோசமா போகும். 

கன்னி

இந்த நாள் உங்களுக்கு சோகமான நாள். என் விதிய எழுதயிலே அந்தச் சாமி உறங்கியதே-னு 
ஸ்டேட்டஸ் போட்டுட்டு ஃபீல் பண்ணீட்டு இருங்க. வேற வழி இல்ல. உங்க ஆள் உங்கள இன்னைக்கு கண்டுக்கவே மாட்டாங்க. 

துலாம் 

இன்னைக்கு உங்களுக்கு உங்க காதலுக்காக வீட்டுல அடிவாங்குற நாள். உங்க வாய் தான் இதுக்கு காரணம். சாதுவான லவ்வர வெச்சுட்டு வீர வசனம் பேசி வாங்கி கட்டிக்குவீங்க. மண்ட பத்ரம் டே. 

விருச்சிகம்

இன்னைக்கு உங்களுக்கு தாங்க ரொம்பவே நல்ல நாள். உங்க ஆள்கூடவே இருப்பீங்க. ஆனாலும் டே டைம் நல்லா போனாலும் ஈவினிங் டைம் கொஞ்சம் லவ்வுல நிரம்பி வழியுற அளவுக்கு போகும். ஹேப்பி டே. 

தனுசு

தூரத்துல இருந்து பாக்கறவங்களுக்கு நீங்க ரொமான்டிக்கா பேசற மாதிரி தெரியும். ஆனால் நீங்களும் உங்க ஆளும் கழுவி கழுவி ஊத்தீட்டு இருப்பீங்க. என்ன செய்யறது இன்னைக்கு நீங்க வாங்குன வரம் அப்படி. 

கும்பம் 

 வீட்டுல உங்க லவ் மேட்டர் தெரியறதுக்கான வாய்ப்புகள் அதிகம். நம்ம வீட்டுக்கு லவ்வெல்லாம் தேவையா கோபி டயலாக்க வீட்டுல இருக்க எல்லாரும் பேசற மாதிரி உங்க லவ்வரும் பேச வாய்ப்புகள் இருக்கு. எக்ஸ்ட்ரீம் லெவல் கன்ஃபியூஷனான நாள்.

மகரம் 

இன்னோரு கொரோனா வந்தாலும் உங்க ஆள் உங்கள அன் ப்ளாக் செய்ய மாட்டாங்க. சோ நீங்க வேற எதாவது ட்ரை பண்ணுங்கனு நான் சொன்னா தப்பாகிடும். கொஞ்ச நாள் அப்பறமா நீங்க புருஞ்சுப்பீங்க. ரியாலிட்டி எப்பவுமே ஹர்ட்ஸ் தாங்க. 

மீனம் 

சொல்றதுக்கு எல்லாம் சரி சரினு தலைய ஆட்டீட்டு அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்னு சொல்லற திறமைசாலி லவ்வர வெச்சுட்டு நீங்க படுற அவஸ்தை ரொம்பவே அதிகம். அதுல இருந்து இன்னைக்கு விடுதலை நாள். சந்தோஷமான நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Tata Sierra:  இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Tata Sierra: இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Embed widget