மேலும் அறிய

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

ஆனி மாதம் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.

கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் ஆலயத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் உற்சவர் மற்றும் மூலவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

அதைத்தொடர்ந்து ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயாருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வெள்ளி கிரீடம் அறிவித்த பிறகு, ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பண்டரிநாதன் மற்றும் ரகுமாய் தாயாரை ஆலயம் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் படி  செய்தனர்.

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

தொடர்ந்து ஆண் பக்தர்கள் தங்களது மேலாடையை நீக்கிவிட்டு, ஒருவர் பின் ஒருவராகவும், பெண் பக்தர்கள் ஒருவர்க்கு பின் ஒருவராகவும் ஸ்ரீ பண்டரிநாதர் ஆலய கருவறைக்குச் சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில் இந்த வழிபாடு நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து 100 ஆண்டு காலமாக ஆஷாட ஏகாதேசி முன்னிட்டு கருவறைக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

குறிப்பாக கருவறைக்கு செல்ல ஆலயத்தின் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார், கோவில் பூசாரிகள் மட்டுமே கருவறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஷாட  ஏகாதேசி முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் அனைத்து பக்தர்களும் கருவறைக்குச் சென்று சுவாமி தொட்டு தரிசிக்கலாம் என்ற நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. காலை 10 மணி முதல்  இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆலயம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

அதைத்தொடர்ந்து, இரவு உற்சவர் பண்டரிநாதன், ரகுமாயி தாயார் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத ஏகாதேசி விழா கருவறைக்குச் சென்று பக்தர்கள் சுவாமியை தொட்டு தரிசிக்கலாம் என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர். இந்த சிறப்பு ஆயுத நிகழ்ச்சியில் கரூர் நகர மட்டுமல்லாது பல்வேறு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget