Aavani Rasipalan: பிறக்கப்போது ஆவணி.. அமோகமாக இருக்கப்போகும் ராசிக்காரங்க யாரு தெரியுமா..?
ஆடி மாதம் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், பல சிறப்புகள் நிறைந்த ஆவணி மாதம் 18-ந் தேதி பிறக்க உள்ளது.
களவாணி திரைப்படத்தில் என் பையன் ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்புக்கு போயிடுவான் அப்படினு ஒரு வசனம் வரும். ஆடி முடிந்த பிறகு வரும் ஆவணி மாதம் அவ்வளவு சிறப்புகளை கொண்ட மாதம் ஆகும். ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்ய முடியாதவர்கள் ஆவணி மாதத்தில் சுபகாரியத்தை தொடங்கி சிறப்பாக நடத்தி முடிப்பார்கள்.
இந்த ஆடி மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு பலன்கள் அமோகமாக உள்ளது என்பதை கீழே காணலாம். ஆடி மாதம் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைவதால் வரும் 18-ந் தேதி ஆவணி பிறக்கிறது. இந்த ஆவணி பிறப்பில் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.
மேஷம்:
ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன் தன் சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால், மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களின் குடும்பம் சிறப்பாக வாழ்வார்கள். வீட்டில் நீடித்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். முழு ஆற்றலுடனும், முழு புத்திசாலித்தனத்துடனும் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு சிறந்த முன்னேற்றம் அமையும். இந்த மாதம் சிறப்பாக இருந்தாலும் கோபத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம் ஆகும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.
மிதுனம்:
இந்தாண்டின் ஆவணி மாதம் மிதுன ராசியினருக்கு மிக சிறப்பாக அமைய உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு ஆவணியில் சகோதர, சகோதரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் பெரியளவில் கிட்டும். எங்கு சென்றாலும் முதன்மை மிக்கவராக திகழ்வீர்கள். அதிகாரம் செலுத்தும் யோகம் உண்டாகும். உறவுகளிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஏனென்றால் உறவுகளுடன் வீண் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெற்றோர்கள் வழியில் அறிவுரையும், ஆலோசனையும் வழங்கப்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே உங்களுக்கு ஆவணி மாதம் அமோகமாக உள்ளது. உங்கள் பேச்சும், செயலும் அடுத்தவர்களை கவரும் விதமாக இருக்கும். மனக்கசப்புகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி புதிய விஷயங்களையும் ஆர்வத்துடன் கற்பார்கள். கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் லட்சுமியோகம் உண்டாகும். இந்த மாதம் சிறப்பானதாக இருந்தாலும் கடக ராசிக்காரர்கள் பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
துலாம்:
ஆசைகள் நிறைவேறி, ஆதாயங்கள் கிட்டும் மாதமாக இந்த ஆவணி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. இந்த ஆவணி மாதத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் நல்ல பெயர் கிடைக்கும். இத்தனை காலமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு முழு பலனை அனுபவிப்பீர்கள்.
விருச்சிகம்:
ஆவணி மாதத்தில் பல பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்களாக விருச்சிக ராசிக்காரர்கள் உள்ளனர். இந்த மாதம் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அமோகமாக இந்த மாதம் உள்ளது. புதிய பொறுப்புகளும், பதவியும் இந்த மாதம் உங்களைத் தேடி வரும். பாராட்டுகள் குவியும். வாய்ப்புகளும், பாராட்டுகளும், நிதிநிலையும் அமோகமாக இருந்தாலும் நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலே கூறிய ராசிக்காரர்கள் மட்டுமின்றி பிற ராசியினருக்கும் ஆவணி மாதம் அமோகமானதாகவே அமைய உள்ளது.