மேலும் அறிய

நாட்டு சர்க்கரை உற்பத்தியில் லட்சங்களில் லாபம்; விழுப்புரம் விவசாயியின் வெற்றிக் கதை..!

வளவனூர் அருகே நாட்டு சர்க்கரை, லிக்யூட் வெள்ளம் உற்பத்தியில் லட்சங்களில் லாபம் பார்க்கும் விழுப்புரம் விவசாயி ரவிச்சந்திரன்.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயி ரவிச்சந்திரன் நாட்டு சர்க்கரை உற்பத்தியில் லட்சங்களில் லாபம் பார்த்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த பிஎஸ்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (67) என்பவர் 22 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் செயற்கை விவசாயத்தை செய்து வந்துள்ளார். செயற்கை விவசாயத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் மண்வளம், மண்ணின் தரம் குறைய தொடங்கியது.

இதனை கவனித்த விவசாயி ரவிச்சந்திரன் இயற்கை விவசாயம் குறித்து பல விபரங்களையும் அறிவுரைகளையும் வழங்கிய நம்மாழ்வார், பாலேக்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இயற்கை விவசாயத்தில் களமிறங்க ஆரம்பித்தார். தற்போது கிருஷ்ணாஸ் ஆர்கானிக் பார்ம் ( Krishna's organic farm ) என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  இயற்கை விவசாய முறையில் பாலேக்கர் முறையை கடைபிடித்து அதன்படி செயல்பட தொடங்கினார். இதனடிப்படையில் 22 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது 20 ஏக்கரில் கரும்பு  பயிரிட்டு அதன் மூலம் நாட்டு சர்க்கரை, வெல்லம், லிக்யூட் வெள்ளம் ஆகியன தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

நாட்டு சர்க்கரை உற்பத்தியில் லட்சங்களில் லாபம்; விழுப்புரம் விவசாயியின் வெற்றிக் கதை..!

இது தொடர்பாக விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில்,  ஒரு ஏக்கருக்கு முதலீடு என பார்த்தீர்கள் என்றால், ஆட்கள் கூலி தான் அதிகமாக இருக்கும்.  ஒரு 20 லட்சம் முதலீடு செய்தால், குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வரை நாம் லாபம் பார்க்கலாம். மேலும் ஒரு வருடத்திற்கு 20 ஏக்கரில் இருந்து 500 முதல் 600 டன் சர்க்கரை எடுத்தால் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை நமக்கு லாபம் கிடைக்கும். இது 20 ஏக்கரில் ஆயிரம் டன்னுக்கு மேல் சர்க்கரை கிடைத்தால் எதிர்பார்த்த அளவை விட நல்ல லாபம் நமக்கு கிடைக்கும்.

நாட்டு சர்க்கரை உற்பத்தியில் லட்சங்களில் லாபம்; விழுப்புரம் விவசாயியின் வெற்றிக் கதை..!

கரும்புகளை பாலேக்கர் முறைப்படி ஊடுபயிர் மூலம் 8 அடி போட்டு கரும்பு சாகுபடி செய்து வந்தால், நிச்சயமாக நூறு வருடம் வரை நமக்கு கரும்பு அறுவடையாகும். கரும்புகளுக்கிடையே மணிலா, பச்சை பயிறு, உளுந்து போன்ற பயிர்களை பயிரிடலாம். மேலும் கன் ஷூட்டர் மூலம் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. கரும்புக்கு உரமாக ஜீவாமிர்தம், மாட்டு சாணம் போன்ற இயற்கை உரத்தினை பயன்படுத்தி வருகிறோம். அறுவடை செய்த கரும்புகளை மெஷினில் செலுத்தி, வடிகட்டிய சாறினை பெரிய பாத்திரத்தில் செலுத்தி சர்க்கரை மற்றும் வெல்லத்திற்கு ஏற்றவாறு பதப்படுத்தி தயாரிக்கிறோம்.

நாட்டு சர்க்கரை உற்பத்தியில் லட்சங்களில் லாபம்; விழுப்புரம் விவசாயியின் வெற்றிக் கதை..!

1 கிலோ சர்க்கரை சில்லறை விலையில் 105 ரூபாய்க்கும், மொத்த விற்பனை விலையில் 82 ரூபாய்க்கும், வெல்லம் ஒரு கிலோ சில்லறை விலையில் 98 ரூபாய்க்கும், மொத்த விற்பனை விலையில் 76 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவை திண்டுக்கல், சேலம், மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இயற்கை விவசாயத்தில் பல பயிர்கள் கொண்டும் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்தால் நிச்சயமாக லாபம் பார்க்கலாம்” என  கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget