மேலும் அறிய

திருவாரூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் - விவசாயிகள் கவலை

ஓகைபேரையூர், மூலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் சம்பா நெல் பயிர்களில் குருத்துப் பூச்சி, தோகை பூச்சி உள்ளிட்ட பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே ஐந்து ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததன் காரணத்தினாலும்,  காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காத காரணத்தினாலும்,  பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும்,  மூன்று போகம் நெல் சாகுபடி என்பது ஒருபோகம் சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் விவசாயிகள் மீண்டும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு திருவாரூர் நாகை தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பா நெல் சாகுபடி தொடங்கிய நிலையிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

திருவாரூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் - விவசாயிகள் கவலை
 
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது நெல் பயிரிடப்பட்டு 60 நாட்களில் இருந்து 70 நாட்கள் ஆன நிலையில் உரம் அடித்தல் கலைகொள்ளி அடித்தல் ஆட்கள் கூலி என இதுவரை ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி அதனை தற்பொழுது தான் வடிய வைத்துள்ளனர். இந்த நிலையில் மழை நீர் வடிய வைத்த பின்னர் திருவாரூர் அருகே ராமானுஜ மணலி, நாகராஜன் கோட்டகம், பூந்தளாங்குடி, மேலமணலி, வடபாதிமங்கலம், புள்ளமங்களம், ஓகைபேரையூர், மூலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் சம்பா நெல் பயிர்களில் குருத்துப் பூச்சி, தோகை பூச்சி உள்ளிட்ட பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மழையில் இருந்து விடுபட்டு மீண்டும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய மகசூல் இழப்பு ஏற்பட கூடிய சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 
திருவாரூர் அருகே 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் - விவசாயிகள் கவலை
 
உடனடியாக பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த எந்தெந்த மருந்துகள் அடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் வேளாண் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் கடைகளில் சென்று விவசாயிகள் கேட்டால் அவர்கள் கூடுதல் விலைக்கு ஏதோ ஒரு மருந்தினை கொடுக்கின்றனர் இதில் பூச்சி தாக்குதல் கட்டுப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget