விவசாயிகளே காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யுங்கள்
நடப்பு 2024 - 2025 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024 -25 ஆம் ஆண்டு பயிருக்கு காப்பீடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கண்காணிப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2024 - 2025 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் (PMFBY) செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு திட்டம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மூலம் செயல்படுத்தவுள்ளது. தற்பொழுது காரீப் பருவ (நெல், மணிலா, சாமை, மக்காச்சோளம், கம்பு போன்ற) பயிர்களுக்கு பிரமியம் தொகை மற்றும் செலுத்தவேண்டிய கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல் 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ690 காப்பீடு செய்ய கடைசி நாள் 15.07.2024 மணிலா 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ590 காப்பீடு செய்ய கடைசி நாள் 31.07.2024 மக்காச்சோளம் 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ436- காப்பீடு செய்ய கடைசி நாள் 16.08.2024 கம்பு 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ 272- காப்பீடு செய்ய கடைசிநாள் 31.07.2024 மற்றும் சாமை 1 ஏக்கருக்கு பிரிமியம் ரூ 190- காப்பீடு செய்ய கடைசி நாள் 16.08.2024 ஒவ்வொரு அறிவிக்கை செய்த பயிர்களுக்கும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்யலாம்.
குத்தகைக்காரர் உட்பட காப்பீடு செய்யலாம்
இந்நிலையில் பருவ மழை பொய்த்த நிலை வறட்சி போன்ற நிலையில் நடப்பாண்டு காரீப் சாகுபடி போதிய விளைச்சல் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருக்கும். இந்நிலையில் காரீப் பருவ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். எனவே இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைக்காரர் உட்பட) காப்பீடு செய்யலாம். பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட பயிர்களுக்கு பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா, நடப்பாண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் கிராமிய வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை (CSC) அணுகலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் காப்பீடு நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி விவரம்
திருவண்ணாமலை 9566751290,ஆரணி 7845626842, செய்யாறு மற்றும் அனக்காவூர் 9524195160,போளூர்- 6381802300 கலசபாக்கம் 9500887072, ஜமுனாமரத்தூர் 8681018735, சேத்துப்பட்டு 8760151917, வெம்பாக்கம் 7845261961, வந்தவாசி 9655482243, கீழ்பென்னாத்தூர் 9600299752, தண்டராம்பட்டு 7010525998 மற்றும் செங்கம் புதுப்பாளையம் 9943132485 இவ்வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயனடையமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.