மேலும் அறிய

காத்து வாங்கிய 34 நேரடி நெல் கொள்முதல் நிலையம் - திருவண்ணாமலை விவசாயிகள் வேதனை

அரசின் கொள்முதல் மையத்தை விட நெல்மூட்டைகள் தனியாரிடம்  அதிக விலை போவதால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

திருவண்ணாமலை (Tiruvannamalai news): திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர். 

நெல் விற்பனைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் குறைந்த நபர்களே பதிவு  

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 முதல்  2025-ஆம் ஆண்டுக்கான சொரனவரி பருவத்துக்கு முதல் கட்டமாக 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. ஆனால் நேற்று மாலை வரை குறைந்த அளவிலேயே விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த காலங்களில் தனி நபர்கள் மிகவும் விலை குறைவாகவும் இடையில் அதிகமாக வைத்து வாங்கியதால் விவசாயிகள் அனைவரும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையே நாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் சம்பா பருவத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டை ஒன்றுக்கு 2700 வரை வெளிமார்க்கெட்டில் விலை போனதனால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்லவில்லை, தாங்கள் அறுவடை செய்த நெல் முழுவதையும் உடனடியாக தனியார் நபர்களிடமே நல்ல விலைக்கு விவசாயிகள் விற்றனர். இதனால் சம்பா மற்றும் இரண்டாம் பாகத்திற்கு திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் மையங்கள் காத்து வாங்குகின்றன.


காத்து வாங்கிய 34 நேரடி நெல் கொள்முதல் நிலையம் - திருவண்ணாமலை விவசாயிகள் வேதனை

காற்று வாங்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள் 

இருப்பினும் இப்போது சொரனவரி பருவத்துக்கு பெரிய கிளாம்பாடி, கீழ்பெண்ணாத்தூர், அணுகுமலை, சோமாஸ்பாடி தண்டராம்பட்டு, அரட்டவாடி, பீமனந்தல், மேல்முடியனூர், காரப்பட்டு, எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி ,இடப்பிறை ,ஆர் குன்னத்தூர், அரியம்பாடி, தச்சூர், மருதாடு, குவளை ,பெருங்குளத்தூர், பாரசூர் ,மேல்சிசி மங்கலம், ஆலத்துறை, ஆலத்தூர், வெங்கட், தவசிமேடு, ஆக்கூர், எச்சூர், வெம்பாக்கம், வட இலுப்பை, நாட்டேரி, தென்னம்பட்டு, அரியூர், கீழநெல்லி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. எனவே விவசாயிகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் அரசின் கொள்முதல் மையத்தை விட நெல்மூட்டைகள் தனியாரிடம்  அதிக விலை போவதால் விவசாயிகள் யாரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது

பொதுவாகவே தற்போது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்துள்ளது. தங்களால் பொருட்கள் எதுவும் வாங்கமுடியவில்லை, இதற்காக விவசாயிகள் நாங்கள் கடன் வாங்கி விவசாயம் பார்க்கிறோம். அப்படி அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வர வேண்டும் என்றால், வாகனத்தின் மூலம் எடுத்துவர வேண்டியதுள்ளது. ஆனால் தனியார் காரார்கள் தங்களுடைய விவசாய நிலத்திற்கே வந்து எடை வைத்து அதற்கான பணத்தை உடனடியாக தந்து விட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget