மேலும் அறிய

விவசாயம் பற்றி தெரியாமல் இருக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்கள்; கிலோ அரிசி 15 ரூபாய் விலை உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருநாளைக்கு 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது நெல் தட்டுபாடல் அரிசி உற்பத்தி குறைந்து ஒரு கிலோ அரிசி 15 ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது.

ஆரணியில் ஒருநாளைக்கு  5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் என்றாலே அரிசி பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றது. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் ஆரணி மற்றும் களம்பூர் பகுதியில் பொன்னி, பிபிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50 உள்ளிட்ட பல ரகங்கள் அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட நகரங்களிலும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆரணியிலிருந்து தினந்தோறும் ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனையடுத்து தற்போது உள்நாட்டு நெல் விளைச்சல் குறைவால் அரிசி உற்பத்தி குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் நெல் சாகுபடி குறைந்து வருவதால் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

விவசாயம் பற்றி தெரியாமல் இருக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்கள்; கிலோ அரிசி 15 ரூபாய்  விலை உயர்வு

ஒரு கிலோ அரிசி  ரூ.15 வரை விலை உயர்வு

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு மட்டும் தமிழகத்திலிருந்து அரிசி 20 சதவீதமும் ஆரணியிலிருந்து 5 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது நெல் விளைச்சல் மிக குறைவாக இருப்பதற்காகவே அரிசி விலைகள் தற்போது ஒரு கிலோவிற்கு  10 ரூபாய் முதல் 15 வரையில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் கூடுதலாக அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் தான் தற்போது நாம் இருந்து வருவதாகவும் தெரிவிகின்றனர். அரிசி விலை குறைய வேண்டுமானால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிகின்றனர். தமிழகத்தில் தஞ்சாவூர் அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் நெல் சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் விலை உயர்ந்த நெல்களான பொன்னி நெல் சாகுபடியில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருபவர்களின் வாரிசுகள் தற்போது ஐ.டி பீல்டிலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதால்

விவசாயம் பற்றி தெரியாமல் இருக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்கள்; கிலோ அரிசி 15 ரூபாய்  விலை உயர்வு

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை 

அடுத்த தலைமுறை இளைஞர்கள்  விவசாயம் என்றால் என்வென்றே தெரியாமல் காணாமல் போகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உணவிற்கு மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் கையேந்தும் நிலைமை உருவாகும் நிலையில் உள்ளோம்.  விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசு முழு மானியம் வழங்கி விவசயாத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயம் பயன்படுத்த கூடிய  மூலபொருட்களான பொட்டாசியம், யூரியா, உரம்  உள்ளிட்ட பொருட்கள் விலையில் தொடர்ந்து உயர்வு ஏற்பட்டாலும்  நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால்  அரிசி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் நேரிடையாக பாதிக்கப்படும் கூடும் என்பதால் அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அரிசியின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget