(Source: ECI/ABP News/ABP Majha)
தூத்துக்குடி: வேப்பமுத்து கிலோ ரூ 120 போவதால் வேப்பமுத்து சேகரிக்கும் பெண்கள் மகிழ்ச்சி
சந்தையில் வேப்பமுத்துக்கள் கடந்த ஆண்டை விட கூடுதல் விலைக்கு வாங்கப்படுகிறது.இதனால் உங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் அச்சம்
வேப்பமுத்து சீசன் தொடங்கியது, ஆர்வமுடன் சேகரிக்கும் மூதாட்டிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய பருவ ஆண்டு ராபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கோடை உழவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலங்களை மென்மேலும் உழவு செய்கின்றனர். இதனால் நிலங்களில் பயிர்களை பாதிக்கும் களைகள் முளைக்காமல் பாதுகாக்கப்படும். தவிர பயிர்களை தாக்கக்கூடிய சாரு உறிஞ்சி நோய், காய்ப்புழு, பிசின் நோய், வேர் அழுகல், படைப்புழு, தண்டு அழுகல் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து காக்க வேளாண் அதிகாரிகள் பரிந்துரைப்பது கோடை உழவு செய்யும் போது விதைப்பதற்கு முன் ஏக்கருக்கு நூறு கிலோ வேப்பம்புண்ணாக்கு நிலங்களில் தூவி உழவு செய்ய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் மண்ணில் புதையுண்டு பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் புழு மற்றும் தாவரங்கள் அழிந்து போகும் என கூறுகின்றனர். தவிர பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா, தவிர பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்திலும் வேப்ப எண்ணெய், வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அத்தகைய வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் தயாரிக்க வேப்பமுத்து முக்கியமானதாகும்..தற்போது ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய இரு மாதங்கள் வேப்பமுத்து சீசன் காலமாகும். கிராமப்புறங்களில் வயதான பெண்கள் முதல் படிக்கும் மானாக்கர் வரை என அனைத்து தரப்பினரும் வேப்பமரங்களில் பழுத்து பழமாகி உதிரும் வேப்பமுத்தை சேகரித்து சந்தையில் விற்று வருகின்றனர். தற்போது ஒரு கிலோ வேப்பமுத்து ரூபாய் நூற்று இருபது வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். கடின உழைப்பை மேற்கொள்ள முடியாதவர்கள் வேப்பமுத்து சேகரிக்க சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, ”சந்தையில் வேப்பமுத்துக்கள் கடந்த ஆண்டை விட கூடுதல் விலைக்கு வாங்கப்படுகிறது. இதனால் உங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் விவசாயிகள் தரப்பில் நிலவுகிறது. உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் ” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.