மேலும் அறிய

கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரம்... எளிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை வளமான உரமாக மாற்றுவதன் மூலம் வளிமண்டல மாசுபாடு, மண்ணின் வளம் சரி செய்யப்பட்டு பல நன்மைகளை அளிக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி திறன் அதிகரித்து மண்ணின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. எனவே இயற்கை உரம் தயாரிக்க முன்வர வேண்டும் என தஞ்சாவூர் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். 

இயற்கையாகவே கழிவுகளானது நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டோ அல்லது மக்கப்பட்டோ உருவானால் அது மக்கும் உரம். பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், உள்ளாட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மூலம் ஏராளமான இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை உரம் தயாரிப்பதற்கான நன்மைகள்

உரம் மண்ணில் உள்ள கரிம பொருள்களின் அளவை அதிகரிக்கிறது. இது மண்ணின் உயிரினங்கள், மண்ணின் அமைப்பு, ஊடுருவல், நீர் வைப்புத் திறன் மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றில் சாதகமான விளைவை உருவாக்குகிறது. உரத்தில் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் மூலம் நோய்கள், பூச்சிகள், களை விதைகள் அழிக்கப்படுகிறது. ஏனெனில் உரக்குவியலில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் அவை உயிர் வாழ முடியாது.

இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள்

பாரம்பரிய முறைகள்: குழி முறை,  குவியல் முறை என்று  இரு முறைகளில் தயாரிக்கும் முறைகள். மேம்படுத்தப்பட்ட முறைகள்: இந்தூர் முறை, நாடெப் முறை, தென்னை நார் கழிவு உரம், பண்ணை கழிவுகளை மக்க வைக்கும் முறை

இந்தூர் முறை முதல் விஞ்ஞான முயற்சியாகும்

இந்த முறை இந்தியாவில் உரம் தயாரிப்பதற்கான முதல் விஞ்ஞான முயற்சியாகும். இந்த முறையில் கழிவு பொருட்களை சாணம் அல்லது மனித கழிவுகளால் பரப்பி ஈரப்படுத்தப்படுகிறது. குழியின் அளவு நீளம் 4- 6 மீட்டர், அகலம் ஒரு மீட்டர், உயரம் 1 மீட்டர் உடையதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களை அடுக்கு மூலம் குழியில் நிரப்பப்படுகிறது, 15 நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை கிளறி விட வேண்டும் போதுமான காற்றோட்டம் தரும்போது நுண்ணுயிரிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. உரம் 3, 4 மாதங்களில் தயாராகிவிடுகிறது.

நாடெப் முறையில் குறைந்த அளவு கால்நடை சாணம் பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ மாட்டு சாணத்தில் இருந்து 40 கிலோ உரம் தயாரிக்கலாம். 100 டன் உரம் தயாரிக்க ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒரு பசுவின் சாணம் போதுமானது. மண்ணின் மேற்பரப்பில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு தொட்டியில் உரம் தயாரிக்கப்படுகிறது.

உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு 15 சென்டிமீட்டர் அளவு இடைவெளியுடன் 9 அடுக்கில் இந்த தொட்டி கட்டப்படுகிறது இவ்வாறு அமைப்பதால் காற்றின் சுழற்சி நன்கு இருக்கும். சுவர் சாணத்தால் பூசப்பட்டிருக்க வேண்டும். கழிவு பொருட்கள் அடுக்கு மூலம் தொட்டியில் நிரப்பப்படுகிறது. முதல் அடுக்கு பயிர் கழிவுகள், களைகள் புல் போன்றவை 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த அடுக்கிற்கு மேல் 125 லிட்டர் தண்ணீரில் மாட்டு சாணத்தை கொண்டு தயாரித்த கரைசலை மெல்லிய அடுக்கு வடிவில் பரப்பப்படுகிறது. இந்த அடுக்குகள் செங்கல் மட்டத்திலிருந்து 0.6 முதல் 0.75 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும்.
 
20 நாட்களுக்குப் பிறகு குப்பை அமிழ்ந்த பிறகு 9 அங்குலங்கள் தொட்டியில் இறங்கி அதே முறையில் நிரப்பப்பட்டு மீண்டும் மண் மற்றும் சாணத்தை கொண்டு மூட வேண்டும். 160 - 175 கன அடி உயரம் மற்றும் 40- 50 கன அடி அளவு கழிவு பொருட்களில் இருந்து சுமார் மூன்று டன் எடையுள்ள உரம் பெறப்படுகிறது. ஒரு பசுவில் இருந்து ஒரு வருடத்தில் சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து 80 டன் உரம் தயாரிக்கலாம் இதில் 100 கிலோ தழைச்சத்து, 560 கிலோ மணிச்சத்து மற்றும் 140 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும். ஒரு தொட்டியை உருவாக்க ரூபாய் ஆயிரம் செலவாகும். மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உற்பத்தியை கணிசமாக உயர்த்தலாம். இவ்வாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
"வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்பினால்.. விமானத்தில் செல்ல தடை" மத்திய அமைச்சர் தடாலடி
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
"வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்பினால்.. விமானத்தில் செல்ல தடை" மத்திய அமைச்சர் தடாலடி
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Diwali Special Bus: தீபாவளிக்கு பஸ் ரெடி! சென்னையில் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்? முழு விவரம்
Irfan Controversy : மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Archery World Cup:வில்வித்தை உலகக் கோப்பை! வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
”திமுக ஆட்சி வரை ஆர்.என். ரவிதான் ஆளுநரா?” வி.கே.சிங் பெயர் அடிபடுவது எதனால்..?
”திமுக ஆட்சி வரை ஆர்.என். ரவிதான் ஆளுநரா?” வி.கே.சிங் பெயர் அடிபடுவது எதனால்..?
Embed widget