மேலும் அறிய

கேழ்வரகு சாகுபடியை மேற்கொண்டு சிறந்த லாபம் பெற வேண்டும் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கேழ்வரகிலுள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மையுள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமலிருக்கவும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது.

கேழ்வரகு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு சிறந்த லாபம் பெற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா அறிவுறுத்தி உள்ளார்.

கேழ்வரகு பயிரிட ஏற்ற பட்டம்: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்

இரகங்கள்: கோ 9, 13, கோ (ரா) 14, கோ15

நிலம் தயாரித்தல்:  நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழுஉரம் இட வேண்டும்.

விதை நேர்த்தி: பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் விதைப்பு: நாற்றங்கால் முறையில் பயிரிட ஹெக்டருக்கு 5 கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு 10 முதல் 15 கிலோ விதையளவும் தேவைப்படுகின்றன.

நடவு: 18 முதல் 21 நாட்கள் வயதுடைய நாற்றுகளை குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகள் வீதம் 15×15 செமீ. (அ) 22.5:10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை. மணி, சாம்பல் சத்துக்களை ஹெக்டருக்கு முறையே 90:45:45 கிலோ இடவேண்டும். 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியத்தை மக்கிய தொழுஉரத்துடன் கலந்து ஒரு ஹெக்டர் நிலத்தில் பரப்பலாம்.

இறவையில் 5 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்குத் தேவையான நாற்றுக்களை 15-30 நிமிடம், வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம்.

களை நிர்வாகம்: விதைத்த அல்லது நட்ட 18ம் நாள் ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். (அ) ஒரு ஹெக்டருக்கு இரண்டு லிட்டர் பியூட்டாகுளோர் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

பூச்சிகள்: கேழ்வரகைப் பொதுவாக பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. எனினும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப்புழுக்கள் தண்டு துளைப்பான்கள், சாறு, உறிஞ்சிகள், வேர் அசுவினி முதலிய பூச்சிகள் தாக்கலாம். வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் (50% ஈசி) 200 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கவும், தண்டுத்துளைப்பான்களை கட்டுப்படுத்த தூர்கட்டும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் இப்பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தலாம்,

வேர் அசுவினியைக் கட்டுப்படுத்த டைமித்தோயைட் 0.03 சதவீத கலவையை வேர்ப்பகுதியில் ஊற்றவும்.

நோய்கள்: கேழ்வரகினை குலை நோய், செம்புள்ளி,  தேமல் நோய் தாக்கலாம். குலை நோயினைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் கார்பென்டசிம் மருந்தினை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது மேன்கோசெப் 1கிலோ என்ற அளவில் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். தேமல் நோயினைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை முதலில் அகற்றவும். இந்நோய் தத்துப்பூச்சிகளால் பரவுவதால் அதைக்கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 0.05 சதவீதம் (500 மிலி/ஹெக்டர்) நோய் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும். தெளித்த 15 நாட்களில் மறுமுறையும் தெளித்தால் நோய் முற்றிலும் கட்டுப்படும்.

கேழ்வரகு சாகுபடியை  மேற்கொண்டு சிறந்த லாபம் பெற வேண்டும் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

அறுவடை: கதிர்கள் நன்கு முற்றி காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.

கேழ்வரகிலுள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மையுள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமலிருக்கவும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ஜீரண சக்தியை அதிகமாக்கவும், இரத்தத்திலுள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. கேழ்வரகில் அதிகளவு சுண்ணாம்புச் சத்து உள்ளது. வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. இரத்தசோகை நோய் வராமல் தடுக்க கேழ்வரகிலுள்ள இரும்பு சத்து மிகவும் பயன்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget