தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகையை உயர்த்தவில்லை ஏன் - விவசாயிகள் கேள்வி
ஆவின் பால் விலை மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைபடியை உயர்த்துகிற தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகையை உயர்த்தவில்லை - கரும்பு விவசாயிகள்
விழுப்புரம்: ஆவின் பால் விலை மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைபடியை உயர்த்துகிற தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகையை உயர்த்தவில்லை என்றும் ஊக்கதொகை 195 வழங்குவதற்கு பதிலாக 300 ரூபாய் வழங்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு கரும்பு விவசாயிகள் சிரமமின்றி கரும்பு வெட்டும் இயந்திரம் வாங்குவதற்கு கூடுதலாக நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும், கரும்பு வெட்டி ஆலை நிர்வாகத்திற்கு அனுப்பிய விவசாயிகளுக்கு பணத்தினை 40 நாட்களுக்குள் வழங்க வேண்டும் அப்படி வழங்காவிட்டால் 15 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பன 9 தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் மத்திய அரசு 2022 -23 ஆம் ஆண்டில் ஒரு டன்னுக்கு 3050 ரூபாய் அறிவித்துள்ளது ஏற்கதக்க தொகை அல்ல.
டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் வழக்க வேண்டும் எனவும் ஆவின் பால் விலையை மாநில அரசு உயர்த்துகிறது அகலவிலைபடியை உயர்த்துகிற மாநில அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகையை உயர்த்தவில்லை 195 வழங்குவதை ஏற்க முடியாது என்றும் 300 ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். மாநில அரசு தங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னையில் கரும்பு விவசாயிகள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் முண்டியம்பாக்கம் கரும்பு அரவை நிறுவனம் 40 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பாக்கி வைதுள்ளதால் உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்