மேலும் அறிய
பட்டி மாடுகள் முன் பேசவுள்ள சீமான்... மதுரையில் ஆடு, மாடுகள் மாநாடு இன்று இப்படி தான் நடக்கப் போகிறது !
ஆடு, மாடுகள் மாநாடு: பட்டிமாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கிடாய்கள் என மாநாட்டில் பல்வேறு கால்நடைகள் முன் சீமான் பேசவுள்ளார்.

ஆடு, மாடுகள் மதுரை மாநாடு
Source : whats app
”ஆடு, மாடுகள் மாநாட்டை சுற்றி எல்.ஈ.டி., திரைகள் அமைத்து, அதில் தொண்டர்கள் அண்ணனின் பேச்சை கேட்கும் படியாக அமைத்துள்ளோம்”.
மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை - நா.த.க., சார்பில் ஆடு, மாடுகள் மாநாடு
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை". - என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் முழுமையாக கவனித்து வருகிறார். இயற்கை விவசாயம், கள் எடுக்கும் உரிமை, தேவையற்ற நவீன வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசிவருகிறார் சீமான். இந்த சூழலில் கால்நடைகள் வனப்பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார். வரலாற்றில் முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடைபெறுவது கவனம் பெற்றுள்ளது.
மாநாட்டில் சீமான் உரை - எல்.ஈ.டி., திரையில்
இந்நிலையில் ஆடு, மாடுகளுக்கான மாநாடு குறித்து நா.த.க., உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன் கூறுகையில்..,” ஆடு, மாநாடுகள் மாநாட்டு திடலில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மாட்டுத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஆயிரக்கணக்கான மாடுகள் நிற்க வைக்கப்படும். மேடையின் இருபுறமும் ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தி வைக்கப்படும். அதே போல் மேடை முன்பாக உள்ள காலி இடத்தில் கிடாய்கள் மற்றும் ஆடுகள் நிறுத்தி வைக்கப்படும். பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளுக்கு மின்னொளி மற்றும் ஒலிபெருக்கி செயல்படுத்தி, கடந்த சில நாட்களாகவே சோதனைகள் செய்யப்பட்டு விட்டது. இதனை சீமான் அவர்கள் கடந்த சில நாட்களாகவே நேரில் வந்து ஆய்வு செய்தார். இதனால் கால்நடைகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் மாநாடு நடைபெறும். இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் அனைத்து பாசன பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். ஆனால் மாநாடு குறித்த நேரத்தில் மட்டும் தான் தொண்டர்கள் திடலுக்கு வரவேண்டும். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே திடலில் பணி செய்வார்கள்.
ஆடு, மாடுகள் முன் சீமான் பேச்சு
கிட்டத்தட்ட பத்து நாட்களாக விராதனூர் பகுதியில் மாநாட்டிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. கால்நடைகளுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக, வாகனங்களை மாநாட்டு திடலில் இருந்து தூரமாக நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு பாசறை கவனித்துக் கொள்வார்கள். மாநாட்டை சுற்றி எல்.இ.டி திரைகள் அமைத்து, அதில் தொண்டர்கள் அண்ணனின் பேச்சை கேட்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. விராதனூர் முள் காட்டுப் பகுதியில் மாநாடு நடைபெறுவதால் கொடிகள் அமைக்கப்பட்டு பாதைகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. குப்பைகள் இல்லாத படி அந்த இடங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. சரியாக ஆறு மணி அளவில் தான் அண்ணன் பேச உள்ளார். வேறு யாரும் பேச வாய்ப்புகள் குறைவு தான்”. என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement





















