மேலும் அறிய

இதை செய்யுங்கள்.. செய்யவில்லை என்றால் பணம் வராது.. விவசாயிகளுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் சொன்ன தகவல்..!

PMKISAN eKYC " இது தொடர்பாக 23.06.2023 முதல் 27.06.2023 முடிய சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக கிராம வாரியாக நடைபெற உள்ளது "

பி.எம். கிசான் ஊக்கத்தொகை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பு அவசியம்  , மாவட்ட  ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  அறிவித்துள்ளார்.

ஆதார் எண் இணைத்தல்

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது பின்வருமாறு : பிரதம மந்திரியின் விவசாய கௌரவ ஊக்கத்தொகை நான்கு மாதத்திற்கு இரண்டாயிரம் (ரூ.2000/-) வீதம் வருடத்திற்கு ஆறாயிரம்  (ரூ.6000/-) ஊக்கத்தொகை 13 தவணையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டு வருகிறது. PM-KISAN திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24000 பயனாளிகள் தற்போது பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய eKYC, நில ஆவணங்கள் பதிவேற்றம் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைத்தல், போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். 

வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4746 பயனாளிகள் eKYC முடிக்காமலும், 2033 பயனாளிகள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இந்திய தபால் வங்கி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜீரோபேலன்ஸ் கணக்கு தொடங்க முன் வந்துள்ளது. மேலும் PMKISAN eKYC இணைக்கும் பணியினை தபால் நிலையத்தை அணுகி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் PMKISAN திட்டத்தில் பயன்பெறும் மேற்கூறிய பணிகளை முடிக்காத பயனாளிகள் அனைவரும் நில ஆவணங்களை தங்கள் பகுதி வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்திலும், eKYC பணியிணை தானாகவே PMKISAN  வலைதளத்தில் அல்லது பொது சேவைமையங்களில் அல்லது தபால் நிலையத்தை அல்லது வட்டார வேளாண்மைஉ தவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சம்மந்தப்பட்ட வங்கிகிளையை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 சிறப்பு முகாம்கள்

மேற்கூறிய பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே PMKISAN 14 வது தவணை மற்றும் அதனைத்தொடர்ந்து உதவித் தொகை பெற இயலும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  இது தொடர்பாக 23.06.2023 முதல் 27.06.2023 முடிய சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக கிராம வாரியாக நடைபெற உள்ளது. எனவே, eKYC விடுபட்டுளள விவசாய பயனாளிகள் அனைவரும், இம்முகாமினை பயன்படுத்தி பலன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், விவரங்களுக்கு தங்கள் அருகாமையிலுள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட  ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகலRahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. தலைநகரில் பரபரப்பு!
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Embed widget