Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
சட்டசபையில் முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், திருமாவளவன் விஜய்க்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீதான பதிலுரையின்போது மிசா குறித்து பேசும்போது முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், முதலமைச்சர் விஜய் தன்னுடைய உடல்மொழி யதேச்சையாக வெளிப்பட்டது என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் விஜய்க்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் விஜய்க்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவல்துறை மானியத்தில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
கண்ணியம் இல்லை:
எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும், மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
முதல்வரின் உடல்மொழி:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 9, 2026
___________________
மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________
காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி…
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு.
ஏற்புடையதல்ல:
கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
வரலாற்றுப்பிழை:
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Before You Go
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ட்ரெண்டிங் செய்திகள்






















