மேலும் அறிய

TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?

TN By Election : 2 தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் தவெகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்காது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சிக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக, ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இதில் மற்ற கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தது.

2 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

அதே நேரம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் ஒட்டுமொத்தமாக 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் தேர்தல் வழக்கு இருப்பதால் இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து மீதமுள்ள 2 தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இடைத்தேர்தல் தவெகவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள்

இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளது. இதில் முதல் ஆளாக திமுக இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுகவும் விருப்ப மனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதே நேரம் தவெகவும் வேட்பாளர்களை நாளைய தினம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளது. அதே நேரம் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன என்பது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. 

கம்யூனிஸ்ட் கட்சி முடிவு என்ன.?

தற்போது வரை தவெக கூட்டணியில் இணையாத கம்யூனிஸ்ட் கட்சிகள், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு அளிக்காமல் மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிக்கமாட்டார்கள் என்ற கேள்விக்கு பதிலாக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இரண்டு வார காலத்திற்குள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். 

குதிரை பேரம் எனவும் கடுமையாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தற்போது இந்த 2 தொகுதியில் போட்டியிடும் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தவெக வேட்பாளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என கம்யூனிஸ்ட் கட்சி வட்டார தகவலாக உள்ளது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

எதுக்கு இந்த BUILD UP... மக்களே இறங்கி CLIMAX எழுதுவதற்குள் விழித்துக் கொள்வாரா முதல்வர்? டிடிவி தினகரன் சரவெடி!
எதுக்கு இந்த BUILD UP... மக்களே இறங்கி CLIMAX எழுதுவதற்குள் விழித்துக் கொள்வாரா முதல்வர்? டிடிவி தினகரன் சரவெடி!
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்! ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசிய விஜய்.. என்ன சொன்னார்?
மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்! தனித்தனியாக அழைத்துப் பேசிய விஜய்.. என்ன சொன்னார்?
மூன்று நாட்கள் எம்எல்ஏக்கள் யாரும் ரிசார்ட்டை விட்டு போகக்கூடாது? சாட்டையை சுழற்ற போகும் முதல்வர் விஜய்!
மூன்று நாட்கள் எம்எல்ஏக்கள் யாரும் ரிசார்ட்டை விட்டு போகக்கூடாது? சாட்டையை சுழற்ற போகும் முதல்வர் விஜய்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று இந்தியர் அசத்தல்!
துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று இந்தியர் அசத்தல்!
வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
Embed widget