உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆச்சரியம்.. பூச்சிகளை விரட்டும் 3G கரைசல் ரகசியம், வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம் !
பூச்சி விரட்டியை விவசாயிகள் பயிர்களில் தண்ணீரில் கலந்து தெளிக்கும் போது பயிர்களை பூச்சிகள் நெருங்காது என விவசாயிகளிடம் வேளாண் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

உசிலம்பட்டியில் இயற்கை முறையில் பயிர்களை தாக்கும் பூச்சிகளை விரட்டுவது குறித்தும், 3G கரைசல் தயாரிப்பது குறித்தும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
பூச்சிகளை இயற்கை முறையில் விரட்டுவது குறித்து விளக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்., இன்று உசிலம்பட்டி உழவர் சந்தையில் பயிர்களில் காணப்படும் பூச்சிகளை இயற்கை முறையில் விரட்டுவது குறித்து விளக்கம் அளித்தனர்.
மிளகாய், இஞ்சி, பூண்டு, மாட்டுக்கோமியம் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும்
உசிலம்பட்டி வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் 3G கரைசல் எனும் பூச்சிவிரட்டி தயாரிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். மிளகாய், இஞ்சி, பூண்டு, மாட்டுக்கோமியம் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பூச்சி விரட்டியை விவசாயிகள் பயிர்களில் தண்ணீரில் கலந்து தெளிக்கும் போது பயிர்களை பூச்சிகள் நெருங்காது என விவசாயிகளிடம் வேளாண் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.





















