மேலும் அறிய

செலவும் குறைவு... நேரமும் மிச்சம்: ஆள் பற்றாக்குறைக்கு தீர்வை அளிக்கும் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு

ட்ரோன் பயன்படுத்துவதால் பணச்செலவு மட்டுமின்றி மன உளைச்சலும் குறைந்துள்ளது. தொழிலாளர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்று காத்திருக்க வேண்டியதில்லை.

தஞ்சாவூர்:  விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் கூலிச்செலவு என பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு வரும் நிலையில், ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நானோ யூரியா, நானோ டி.ஏ.பி. போன்ற உரங்களை ட்ரோன் மூலம் தெளிக்கும் முறை விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் உரம் தெளிக்க முடிவதுடன், செலவும் குறைவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளின் வயலில், இப்கோ நிறுவனம் சார்பில் நானோ உரங்கள் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நவீன விவசாயத் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு நானோ உரம் தெளிக்கும் முறை விவசாயிகளுக்கு நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. 

வயலின் மீது ட்ரோன் பறந்து சென்று சீரான முறையில் உரத்தைத் தெளிப்பதை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதுகுறித்து இப்கோ அதிகாரி எஸ்.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக ஆள் பற்றாக்குறை உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நெற்பயிர்களுக்கு உரம் தெளிக்கும் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. தொழிலாளர்களை ஏற்பாடு செய்வது முதல் அவர்களுக்கு கூலி வழங்குவது வரை விவசாயிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. ஒரு ஏக்கருக்கு உரம் தெளிக்கவே அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு மாற்றாக ட்ரோன் மூலம் நானோ உரங்களை தெளிக்கும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மில்லி நானோ யூரியா போதுமானது. இதனை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ட்ரோன் மூலம் தெளிக்கலாம். இந்த முறையில் வெறும் 10 நிமிடங்களில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உரம் தெளிக்கும் பணியை முடிக்க முடியும். அதேபோல் 10 ஏக்கர் பரப்பளவு இருந்தாலும் சுமார் 2 மணி நேரத்திற்குள் உரம் தெளிக்கும் பணியை நிறைவு செய்யலாம். இதனால் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும், நானோ உரங்கள் இலை வழியாக நேரடியாக பயிர்களுக்கு கிடைப்பதால், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், மகசூல் அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதேபோல் நானோ டி.ஏ.பி. உரத்தையும் ட்ரோன் மூலம் தெளிக்க முடியும். விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது: நானும் இதற்கு முன்பு டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்களை நேரடியாக மண்ணில் போட்டு வந்தேன். தற்போது நானோ உரங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மண்ணில் உரங்களை இடுவதைக் காட்டிலும் இலை வழியாக நானோ உரங்களை தெளிப்பதால் உரச் செலவு கணிசமாக குறைகிறது. ஒரு மூட்டை டி.ஏ.பி. உரத்தின் விலை சுமார் ரூ.1,400 ஆக உள்ளது. ஆனால் நானோ டி.ஏ.பி. உரத்தின் விலை சுமார் ரூ.600 மட்டுமே. இதனால் உரம் வாங்குவதற்கான செலவிலும் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடிகிறது.

தற்போது நான் ஏ.டி.டி. 37 ரக நெல்லை சாகுபடி செய்துள்ளேன். இந்த சாகுபடியில் அடியுரமாக அரை மூட்டை டி.ஏ.பி. மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். அதன்பிறகு பயிர்களுக்கு தேவையான உரங்களை நானோ உரங்கள் மூலம் இலை வழியாக தெளித்து வருகிறேன். இதனால் உரச் செலவு குறைவதுடன், உரமிடும் பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது. முன்பு உரங்களை மண்ணில் இடுவதற்கு தொழிலாளர்களை தேடி அலைய வேண்டியிருந்தது. தற்போது விவசாய வேலைகளுக்கு கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. கிடைக்கும் தொழிலாளர்களுக்கும் அதிக கூலி வழங்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு ட்ரோன் தொழில்நுட்பம் நல்ல தீர்வாக அமைந்துள்ளது.

ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் பணியை மேற்கொண்டபோது, வெறும் அரை மணி நேரத்தில் நாலரை ஏக்கர் நிலத்திற்கும் உரம் தெளித்து முடித்துவிட்டனர். இதே பணியை தொழிலாளர்களை வைத்து மேற்கொண்டால் குறைந்தது 4 பேர் தேவைப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.700 முதல் ரூ.750 வரை கூலி வழங்க வேண்டும். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட கூடுதல் செலவுகளும் ஏற்படும். காலை 9 மணிக்கு தொடங்கும் பணி மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை நீடிக்கும். ஆனால் ட்ரோன் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் நாலரை ஏக்கருக்கு ரூ.2,000 முதல் ரூ.2,250 வரை செலவாகிறது. குறைந்த நேரத்தில் பணியும் முடிந்துவிடுகிறது.

ட்ரோன் பயன்படுத்துவதால் பணச்செலவு மட்டுமின்றி மன உளைச்சலும் குறைந்துள்ளது. தொழிலாளர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்று காத்திருக்க வேண்டியதில்லை. வெயில் அதிகமாக இருக்கிறதா, மழை வருமா என்று பார்த்துக்கொண்டு வேலைகளை தள்ளிப்போட வேண்டிய அவசியமும் இல்லை. போன் செய்தால் ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் பணிக்கு வந்து விடுகிறார்கள். சில மணி நேரங்களிலேயே பல ஏக்கர் நிலங்களில் உரம் தெளித்து முடித்துவிட முடிகிறது. இதனால் விவசாயப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள முடிகிறது என்றார்.

விவசாயத்தில் தொழிலாளர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் மாற்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் உரம் தெளிக்க முடிவதும், தொழிலாளர் கூலிச் செலவை கட்டுப்படுத்த முடிவதும் விவசாயிகளுக்கு கூடுதல் பலனாக அமைந்துள்ளது. சூரக்கோட்டையில் நடைபெற்ற இந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ட்ரோன் மூலம் நானோ உரம் தெளிக்கும் முறையை நேரில் பார்வையிட்டனர். நவீன தொழில்நுட்பத்தை தங்கள் வயல்களிலும் பயன்படுத்துவது குறித்து ஆர்வம் தெரிவித்தனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: குறைதீர்க்கும் நாள் கூட்டம் எப்போது? முழு விவரம்!
நாகை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: குறைதீர்க்கும் நாள் கூட்டம் எப்போது? முழு விவரம்!
கார்த்திகை தீபம்: மதுரை மல்லிகைப் பூ விலை தலை சுத்தவைக்கிறது.. பனிப்பொழிவால் பூ விலை உயர்வு !
கார்த்திகை தீபம்: மதுரை மல்லிகைப் பூ விலை தலை சுத்தவைக்கிறது.. பனிப்பொழிவால் பூ விலை உயர்வு !
2.21 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி... ரூ.605 கோடி பயிர்க்கடன் இலக்கு: தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
2.21 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி... ரூ.605 கோடி பயிர்க்கடன் இலக்கு: தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
விவசாயிகளே உங்க குறைகளை சொல்ல தயாரா? நவ. 26-ல் முக்கிய கூட்டம்!
விவசாயிகளே உங்க குறைகளை சொல்ல தயாரா? நவ. 26-ல் முக்கிய கூட்டம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Embed widget