மேலும் அறிய

மிளகு சாகுபடி செய்து ஏக்கருக்கு 5 லட்சம் சம்பாதிக்கலாம்! ஐடியா கொடுக்கும் விவசாயிகள்!

சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கூடுதல் லாபம் ஈட்ட முடியும்  என முன்னோடி விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது. வேட்டைக்காரன் புதூரில் உள்ள முன்னோடி மரப்பயிர் விவசாயி வள்ளுவன் என்பவரின் பண்ணையில் நடந்த இப்பயிற்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 600 விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் வள்ளுவன் பேசும்போது, “நான் ஈஷாவின் வழிக்காட்டுதலுடன் கடந்த 12 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தென்னையை பிரதான பயிராக செய்கிறேன். அதற்கு இடையில் மரங்களையும், மற்ற பயிர்களையும் சேர்த்து பல பயிர் சாகுபடி முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக, தென்னையிலும், மரங்களிலும் மிளகு கொடியை ஏற்றி உள்ளேன்.

மிளகு சாகுபடி செய்து ஏக்கருக்கு 5 லட்சம் சம்பாதிக்கலாம்! ஐடியா கொடுக்கும் விவசாயிகள்!

பொதுவாக சமவெளியில் மிளகு விளையாது. அது மலைப்பயிர் என சொல்வார்கள். ஆனால், இங்கு சமவெளியிலேயே நன்கு வளர்கிறது. நட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்தில் இருந்தும் சராசரியாக 2 கிலோ வரை மிளகு அறுவடை ஆகிறது. ஒரு கிலோ மிளகை ரூ.800-க்கு விற்பனை செய்கிறேன். தென்னையை மட்டும் நம்பி இருக்காமல் இப்படி பல பயிர் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது” என்றார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசும்போது, “புதுக்கோட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சமவெளியில் மிளகு சாகுபடியை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். இதை நாங்கள் நேரடியாக களத்திற்கே சென்று பார்த்தோம். தேக்கு, மகோகனி, தென்னை போன்ற மரங்களில் மிளகு கொடியை ஏற்றி வளர்த்து வருகின்றனர். 4-வது அல்லது 5-வது ஆண்டில் இருந்து மிளகு காய்ப்புக்கு வருகிறது. அவர்கள் ஆண்டுக்கு ஏக்கருக்கு 100 கிலோவில் இருந்து 1000 கிலோ வரை மகசூல் எடுக்கின்றனர். ஒரு கிலோ ரூ.500-க்கு விற்றாலும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை கூடுதல் லாபம் ஈட்ட முடியும். இதுதவிர்த்து, தென்னை மற்றும் மற்ற ஊடுப் பயிர்களில் இருந்தும் தனி வருமானம் கிடைக்கும்.

மிளகு சாகுபடி செய்து ஏக்கருக்கு 5 லட்சம் சம்பாதிக்கலாம்! ஐடியா கொடுக்கும் விவசாயிகள்!

ஆகவே, சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்பதை உணர்ந்தோம். இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக இந்த மிளகு சாகுபடி களப் பயிற்சியை நடத்தி வருகிறோம். எனவே, அனைத்து மாவட்ட விவசாயிகளையும் பரீட்சார்த்த முறையில் மிளகு சாகுபடி செய்ய அறிவுறுத்துகிறோம். அவர்கள் நிலத்தில் மிளகு செடி நன்கு வளர தொடங்கினால் அதை விரிவுப்படுத்த சொல்கிறோம். இதன்மூலம், விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களில் இருந்து 5, 10 ஆண்டுகளுக்கு பிறகு வருமானம் ஈட்டுவதற்கு முன்பாகவே, கூடுதல் வருட வருமானம் பார்ப்பதற்கு இந்த மிளகு சாகுபடி விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாபகரமாக மிளகு சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயிகள் சங்கத்தினரான ராஜாகண்ணு, பாலுசாமி, செந்தமிழ் செல்வன், பாக்கியராஜ் மற்றும் கடலூர் விவசாயி திருமலை ஆகியோர் மிளகு சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பங்களையும், வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget