மேலும் அறிய

நடப்பாண்டு ரபி பருவ இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு

2023-24ம் ஆண்டில், ரபி பருவத்தில் நெல் (கோடை) மற்றும் நெல் தரிசில் உளுந்து, எள் பயிர் ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கிராமம் மற்றும் குறுவட்டங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ரபி பருவ இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட  கலெக்டர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயினை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூருக்கு இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சாவூருக்கு பியூச்சர் ஜெனராலி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் தஞ்சாவூர், (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர). ஒரத்தநாடு, திருவோணம். பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவசத்திரம் மற்றும் அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் இதில் அடங்கும்.

தஞ்சாவூர்  பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள். மேலும் தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதாக்குடி, ராயந்தூர் கிராமங்கள் (பூதலூர் பிர்கா), அரசூர் சின்ன அவுசாகிப் தோட்டம். கலிய பானு ராஜா தோட்டம். மனக்கரம்பை, நாகத்தி, ராஜேந்திரம், செங்களுநீர் தோட்டம் மற்றும் தென்பெரம்பூர் (கண்டியூர் பிர்கா) ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும். அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள அகரமாங்குடி, பெருமாக்க நல்லூர். பொரக்குடி, செருமாக்கநல்லூர், சுரைக்காயூர், வடக்கு மாங்குடி, வையச்சேரி, வேம்புகுடி (அய்யம்பேட்டை பிர்கா) ஆகிய கிராமங்களும், தேவராயன்பேட்டை. மேலசெம்மங்குடி, பொன்மான் மேய்ந்தநல்லூர், புலிமங்கலம் மற்றும் திருவையாத்துக்குடி (பாபநாசம் பிர்கா) கிராமங்கள் இதில் அடங்கும்.

2023-24ம் ஆண்டில், ரபி பருவத்தில் நெல் (கோடை) மற்றும் நெல் தரிசில் உளுந்து, எள் பயிர் ஆகியவற்றிற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கிராமம் மற்றும் குறுவட்டங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கீழ்காணும் பயிர்களுக்கு அதற்குரிய கடைசி தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1433), வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர். புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் அனைவரும் பயனடையுமாறும், கடைசி நேர இன்னல்களை தவிர்த்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
Breaking News LIVE: நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Embed widget