மேலும் அறிய

மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் குட்டி ஹாலந்த் என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. இப்பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட அனைத்து மலர்களுக்கான விவசாயம் செய்யும் பணியானது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மதுரை மல்லி என்று அழைக்கப்படுவது மதுரையில் அல்ல நிலக்கோட்டையில் மலரும் மல்லிகையை தான். அப்படி மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பூக்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இந்த விவசாயம் குறித்து விவசாயிகள் பேசுகையில் மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்தாலே பூ செடியிலேயே கருகி விடுகிறது. அதேபோல் தற்போது மல்லிகை பூக்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதால் சாதாரண நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ பூ பூத்தால், இன்றைய சூழலில்  ஒரு கிலோ பூ தான் பூக்கிறது. அதேபோல் ஒரு ஏக்கருக்கு பூக்கள் பூத்து எடுக்கும் வரை அந்த 45 நாட்களுக்கு மட்டும் சுமார் ஐந்து முறை மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

ஒரு முறை மருந்து தெளிப்பதற்கு 4 ஆயிரம் ருபாய்க்கு மருந்து 1000 ரூபாய் கூலி என செலவாகிறது. 45 நாட்களில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. அதேபோல் குடும்பத்தோடு வேலை செய்தும் கூலியாக்களை 500 ரூபாய் வரை வழங்கி வரவழைத்து பூக்களை பாதுகாத்து வந்தாலும் பூச்செடிகளில் மிகப்பெரிய அளவில் தற்போது வருமானம் இல்லை. தமிழக விவசாய துறையோ, வேளாண்மை துறையோ, தோட்டக்கலை துறையும் எந்த அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை. எந்த ஒரு பயன்களும் வருவதில்லை என்று கூறுகின்றனர் விவசாயிகள்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

மேலும் பல்லாயிரம் ஏக்கர் மலர்களை விவசாயம் செய்து வரும் நாங்கள் எங்களது வாழ்வு மலர் போல் மணக்கவில்லை. 20,000 ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வந்தால் தான் எங்களது குழந்தைகள் முதல் அனைவரையும் பாதுகாக்க முடியும். கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தர முடியும். எங்களுக்கு நோய்வாய் பட்டாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால் இருபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து 10,000 ரூபாய் வருமானம் வந்தால் வீட்டில் உள்ள பெண்களின் மூக்குத்தி முதல் அண்டா குண்டா வரை அடகு வைத்து செலவு செய்த அனைத்து பணமும் வீணாகி கடனாளியாகவே மாறி வருகிறோம்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கடை கோடியில் உள்ள எங்களைபோன்றவர்களுக்கு எந்த ஒரு மானியமோ, திட்டங்களோ அல்லது இலவச உரமோ எதுவுமே கிடைப்பது கிடையாது.எங்களைப் போல் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் சேர வேண்டும். ஆனால் விவசாய அதிகாரிகளோ, விவசாயத் துறையினரோ யாரும் எங்களை வந்து கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து விவசாயத்தை மட்டுமே பரம்பரையாக செய்து வரும் எங்களுக்கு தற்போது விவசாயத்தின் காரணமாக மிகப்பெரிய கடனாளியாகவே மாறி வருகிறோம். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.


மல்லிகைக்கு பெயர்போன நிலக்கோட்டையில் கேள்விக்குறியாகும் மல்லிகை விவசாயம் - காரணம் என்ன?

விவசாயிகள் எவ்வாறு பாதிக்கின்றனர் அந்த பயிருக்கு என்ன முறையில் மருந்துகள் வைத்தால் பாதுகாக்க முடியும் என்று நேரடியாக வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளை வேளாண் துறை அதிகாரிகள் புறக்கணித்தே வந்தால் முற்றிலுமாக விவசாயம் அழிந்து விடும். ஆகவே தமிழக அரசு தலையிட்டு நிலக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். மல்லிகை விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget