மேலும் அறிய

டிஏபி உரத்தை டெல்டா விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் - வேளாண் விஞ்ஞானிகள் அட்வைஸ்

டெல்டா பகுதியில் நீரில் மணிசத்து அதிகமாக இருப்பதால் பச்சைபாசியின் வளர்ச்சி அதிகரித்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன், சூரியஒளி கிடைக்காமல் காய்ந்து வருவதாக  வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்திற்கு கர்நாடகவில் இருந்து காவிரிநீர் கிடைக்காததாலும், மழை பொய்த்ததாலும் டெல்டா மாவடங்களில் நிலத்தடி நீரில் மணிசத்து (பாஸ்பரஸ்) அதிகமாக இருப்பதால் பச்சைபாசியின் வளர்ச்சி அதிகரித்து பயிர்களின் வேர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன், சூரியஒளி கிடைக்காமல் காய்ந்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் போர்வெல் மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் பம்புசெட் நீரை கொண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 1 லட்சத்து 84 ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

டிஏபி உரத்தை டெல்டா விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் - வேளாண் விஞ்ஞானிகள் அட்வைஸ்

இந்நிலையில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடிக்கு காவிரிநீர் கிடைக்காததால் பம்புசெட் நீரை கொண்டு விவசாயிகள் சாகுபடி பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் மயிலாடுதுறை அருகே பொன்னூர் கிராமத்தில் அகோரம் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 25 ஏக்கரில் உமாரகம் சம்பா பயிரை நடவு செய்து ஒரு மாதம் ஆன நிலையில் பயிர்கள் வளராமல் தரையோடு தரையாக கருகி உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பயிர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பயனில்லை. காவிரி ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் மழையும் பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் உப்பு கரைசலாக மாறியதன் விளைவாக நெற்பயிர்கள் கருகியது. பொன்னூர், பாண்டூர், கட்டளைச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கருக்குமேல் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

டிஏபி உரத்தை டெல்டா விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் - வேளாண் விஞ்ஞானிகள் அட்வைஸ்

இந்நிலையில்  பயிர் பாதிப்பு குறித்து  ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியில்துறை பேராசிரியர் டாக்டர் ராஜப்பன், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் சேகர், மண்ணியல்துறை உதவி பேராசிரியர் மணிகண்டன், உழவியல்த்துறை இணை பேராசிரியர் நாகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பொன்னூர் கிராமத்தில் பயிர்கள் காய்ந்து சேதமடைந்த வயல்களை ஆய்வு செய்து மண் மற்றும் நீரை பரிசோதனைக்காக எடுத்துகொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பாதிப்பு குறித்து பேசிய நோயியியல்துறை பேராசிரியர் ராஜப்பன் கூறுகையில், இப்பகுதிகளில் ஆழ்துளை கிணறு போர்வெல் நீர் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழைபொய்த்ததாலும், காவிரிநீர் கிடைக்காததால் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டகளில் நிலத்தில் மணிசத்து (பாஸ்பரஸ்) அதிகமாக இருப்பதால் பச்சைபாசியின் வளர்ச்சி அதிகரித்து பயிர்களின் வேர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன், சூரியஒளி கிடைக்காமல் காய்ந்து வருகிறது.

டிஏபி உரத்தை டெல்டா விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் - வேளாண் விஞ்ஞானிகள் அட்வைஸ்

மணிசத்து அதிகம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் டிஏபி உரத்தை பயன்படுத்துவதால் அந்த மணிசத்தும் பச்சைபாசியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.  இதனால் பயிர்களுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்களை இந்த பச்சைபாசிகள் இழுத்து கொள்வதால் பயிர்கள் சேதமடைகிறது. மேலும் நிலத்தில் உப்புதன்மை உள்ள வயல்களில் விவசாயிகள் டிஏபி உரம் பயன்படுத்துவதை தவிர்த்து யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களை பயன்படுத்தலாம். டெல்டா மாவட்டங்களில் உள்ள மண்ணில் மணிசத்து தேவையான அளவு உள்ளது. ஆனால் அதுகிட்டா நிலைவில் உள்ளது. மணிசத்து அதிகம் உள்ள வயல்களில் பாஸ்போபாக்ட்ரீயர் நுண்ணுயிர் உரம் பவுடர் மற்றும் திரவ வடிவில் உள்ளது. பச்சைபாசி தென்படக்கூடி வயல்களில் காப்பர்சல்பேட் (மயில்துத்ததானம் ) ஏக்கருக்கு 2 கிலோ வாங்கி 20 கிலோ ஆற்றுமணலுடன் கலந்து தூவிவிட்டு தண்ணீர்தேக்காமல் இருந்தால் பச்சைபாசிகள் அகன்று பயிர்களுக்கு தேவையான ஆக்சிஜன், சூரியஒளி கிடைக்கும்.

டிஏபி உரத்தை டெல்டா விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் - வேளாண் விஞ்ஞானிகள் அட்வைஸ்

குறுவை, சம்பா சாகுபடிக்கு இடைப்பட்ட காலத்தில் பசுந்தாள் உரத்தை வளர்த்து 45 நாள் முதல் 60 நாட்களில் வயலில் மடங்கி உழவு செய்தால் கனிம சத்தை அதிகரிக்கும் இதன் மூலம் நிலத்தில் உப்புதண்மை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்திய பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது. மணிசத்து என்று கூறக்கூடிய பாஸ்பரஸ் உப்புதன்மை அதிகமாவதால் நடவு செய்த பயிர்கள் பச்சைபிடிக்காமல் கருகி காய்ந்து சேதமடைகிறது. இதனை தவிர்ப்பதற்கு மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றினால் நல்லமுறையில் சாகுபடி செய்ய முடியும் என்றார். அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயபால், வேளாண் இணை இயக்குனர் சுப்பையன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget