மேலும் அறிய
Advertisement
தர்மபுரி : உணவு தேடி கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகள்.. வீணான 10 டன் கரும்பு.. களேபரமான பயிர் வயல்..
காரிமங்கலம் அருகே உணவு தேடி வந்து கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகளை, 12 மணி நேரத்திற்கு பிறகு வனத்திற்குள் விரட்டியடிப்பு 10 டன் கரும்பு நாசம்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் பஞ்சாயத்து குட்டகாட்டூர் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் ஒரு ஏக்கருக்கு மேல் உள்ளது. இந் நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட இரண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானை என 3 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
அப்பொழுது சீனிவாசனின் கரும்பு தோட்டத்திற்குள் வந்த நுழைந்திருந்தது. இந்நிலையில் காலை தண்ணீர் எடுத்துவிட வந்துள்ளனர். அப்பொழுது கரும்பு திட்டத்தில் யானை பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த சீனிவாசன், வீட்டின் மேல் ஏரி பார்த்துள்ளார். அப்பொழுது கரும்பு தோட்டத்தில் யானைகள் இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்துள்ளது குறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரும்பு தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள், கரும்பு சாப்பிடுவதும், அருகில் உள்ள பண்ணை குட்டையில் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் வனத் துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனையடுத்து மாலை 5 மணியளவில் பாலக்கோடு ரேஞ்சர் நட்ராஜ் தலைமையில் தேன்கனிக்கோட்டை மற்றும் பாலக்கோடு வனத்துறையினர் 15-க்கும் மேற்பட்டோர், வெடி வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் வெடிகளை வெடித்து வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் யானைகளை கொண்டு வந்தனர். அதனையடுத்து மூன்று யானைகளும் பாலக்கோடு வனப் பகுதியை நோக்கி புறப்பட்டது.
தொடர்ந்து வனத் துறையினர் பின் தொடர்ந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் யானைகளை விரட்டும் பணி, 15 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால் சீனிவாசன் தோட்டத்தில் சுமார் 10 டன் அளவிற்கு யானைகள் கரும்பை உண்டும், மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் வெட்ட இருந்த பத்து டன் கரும்பு முழுமையாக நாசம் அடைந்ததால், விவசாயி மிகுந்த வேதனையடைந்துள்ளார். மேலும் யானை சேதம் செய்த கரும்பு பயிருக்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கி.பி 9-ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழித்தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு..
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion