மேலும் அறிய

தேனி : தேசிய வேளாண் சந்தை மூலம் 3,309 டன் விளைபொருட்கள், ரூ.6 கோடிக்கு பரிவர்த்தனை.. முழு விவரம்..

தேனி மாவட்டத்தில் தேசிய வேளாண் சந்தை மூலம் 3,309 டன் விளைபொருட்கள் ரூ.6 கோடிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் ஒரே உரிமம், ஒரே வணிகம், ஒரே வணிக சந்தை என்ற நோக்கில் மின்னணு தேசிய வர்த்தக சந்தை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 585 வேளாண் சந்தைகள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 23 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் ஒன்று. இந்த விற்பனைக்கூடம் கடந்த 2017-ம் ஆண்டு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டு, மின்னணு வர்த்தகம் நடந்து வருகிறது.


தேனி : தேசிய வேளாண் சந்தை மூலம் 3,309 டன் விளைபொருட்கள், ரூ.6 கோடிக்கு பரிவர்த்தனை.. முழு விவரம்..

இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யவும், வியாபாரிகள் விளைபொருட்களின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு உள்ளூர் விலையைவிட கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை ஏற்படுகிறது. அந்த வகையில் கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தைகள் மூலம் மின்னணு வர்த்தகத்தில் தற்போது வரை 2,958 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.5 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1276.35 டன் வேளாண் பொருட்கள் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் பணப்பரிவர்த்தனையாகவும், 1681.65 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.2 கோடியே 90 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் மின்னணு பரிவர்த்தனை மூலமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 495 விவசாயிகள் பயனடைந்தனர்.


தேனி : தேசிய வேளாண் சந்தை மூலம் 3,309 டன் விளைபொருட்கள், ரூ.6 கோடிக்கு பரிவர்த்தனை.. முழு விவரம்..

அதுபோல், 2020-21-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மேலும் 40 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டது. அதில், தேனி மாவட்டத்தில் 2-வது தேசிய வேளாண் சந்தையாக தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேர்வு செய்யப்பட்டு இணைக்கப்பட்டது. 3,309 டன் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இதுவரை 351 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.99 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.3 லட்சத்து 87 ஆயிரம் பணப்பரிவர்த்தனையாகவும், ரூ.95 லட்சத்து 82 ஆயிரம் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமும் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் 105 விவசாயிகள் பயன்பெற்றனர். இந்த திட்டத்தின் கீழ் கம்பம், தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் மொத்தம் 3,309 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.6 கோடியே 7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 600 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். என ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget