மேலும் அறிய

வீணாகிறதா தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகள் தயாராக இருந்து வரும் நிலையிலும் பொதுமக்கள் தடுப்பூசி போட முன்வராததது, அரசின் கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் 2019-ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் இருந்து  தன் ஆளுமையை தொடங்கியது. கொரோனா வைரஸ் மற்ற வைரஸ் கிருமிகளை போலவே பல உருமாற்றங்களை பெற்று இன்று கொரோனா 2-வது அலையாக வலம் வந்துகொண்டு இருக்கிறது.  இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் குறிப்புகளின்படி  புதன்கிழமை மட்டும் இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சம்  புதிய கோவிட் -19 நோயாளிகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு , இந்தியாவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும்  நபர்களின் எண்ணிக்கையை 1,23,36,036 ஆக உயர்த்தியுள்ளது .

வீணாகிறதா தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்
 
குறிப்பாக தமிழகத்தில் புதன் அன்று மட்டும் புதிதாக 3,677 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டுடறியப்பட்டு,  தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,985  ஆக உயர்ந்துள்ளது . ஒருபுறம் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவினாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ  தரவுகளின்படி இது வரை இந்தியா வில் 11.11 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதில் தமிழ் நாட்டிற்கு மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 54 லட்சம் தடுப்பூசிகளில் 37 லட்சம் தடுப்பூசிகளே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.  

வீணாகிறதா தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறும் போது , மற்ற மாநிலங்களை  விட தமிழ் நாட்டில் குறைந்த அளவே கோவிட் தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் சோகமான செய்தி, மருத்துவம் படித்த மருத்துவர்களே கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதுதான். 
தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5  லட்சம் கோவிட் தடுப்பு மருந்துகளை செலுத்தும் அளவுக்கு 5 ,000 கோவிட் தடுப்பூசி மையங்கள்அமைக்கபட்டுள்ளது . 
மத்திய மாநில அரசுகளின் துணையோடு தமிழ் நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் , பட்டித் தொட்டி எங்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் ஊரடங்கு என்பதற்கே அவசியமில்லை. வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
"புயல் எதிரொலி” தியேட்டர்கள் இயங்காது என அறிவிப்பு..!
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
Embed widget