María Corina Machado Profile |அமைதிக்கான நோபல் பரிசுடிரம்பை ஓரம்கட்டிய பெண்! யார் இந்த மரியா கொரினா?
2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் எதிர்கட்சி தலைவர் மரியா கொரினா மசோடா என்ற பெண்மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை பெரிதும் எதிர்பார்த்து காத்து இருந்த அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்புக்கு ஏமாற்றமே மிச்சியது. இப்படி ட்ரம்பை ஓரங்கட்டி அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வீரமங்கை யார் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்,
1967ம் ஆண்டு அக்- 7ம் தேதி பிறந்தவர் மரினா கொரினா மசோடா, இவருக்கு 58 வயதாகிறது. அடிப்படையில் இவர் ஒரு இஞ்சினியராவார். மேலும் இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
2002ம் ஆண்டில் சுமதே என்ற அமைப்பை உருவாக்கி சமூக பணியில் தீவிரமாக களமாடினார். மேலும் தன்னை வென்தே வெனிசுலா கட்சியில் இணைத்து கொண்டு அரசியலில் ஈடுபட்டார். பின்னர் அக்கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
2012ம் ஆண்டு நடந்த வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் . ஆனால் அந்த தேர்தலில் மரியா ஹென்ரிக்-யிடம் தோல்வி அடைந்தார். அதேபோல 2014ம் ஆண்டு அதிபர் நிகோலஸின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வெனிசுலாவில் உள்நாட்டு போராட்டம் வெடித்தது, இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து போராடியதில் முதன்மையானவராக செயல்பட்டார் மரினா.
கலவரத்தை உருவாக்குதல், தூண்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி 2023ம் ஆண்டில் வெனிசுலா நாட்டு தேர்தலில் போட்டியிட அவருக்கு 15 ஆண்டுகள் தடை விதித்தது அந்த நாட்டு அரசாங்கம் . பின்னர், அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அந்த தடையை உறுதி செய்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
2018ம் ஆண்டு பிபிசி பட்டியலிட்ட உலகின் மிகவும் பிரபலமான 100 பெண்களில் ஒருவராக இடம்பெற்றார் மரினா. அதேபோல நடப்பாண்டில் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கான 100 பெண்களில் ஒருவராக இடம்பெற்றார். மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தி வால் ஸ்ட்ரீட் ஜார்னலில் எழுதிய கடிதம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.
மக்களாட்சி சிறக்க , மனித உரிமை காக்க எந்த வித சமரசமும் இன்றி சர்வாதிகாரத்துக்கு எதிராக தொடர்ந்து போராடும் பெண் போராளி மரியா கொரினா மசோடா என்று நோபல் பரிசு கமிட்டி பாராட்டி உள்ளது.
இதற்க்கு முன்பு இலக்கியம், இயற்பியல், வேதியல், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















