மேலும் அறிய

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!

யூடியூபில் பணம் மற்றும் தங்க நகைகள் நிறைய இருப்பதை வீடியோவாகப் பதிவிட்டு வந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது போலீஸார் திருட்டு வழக்கு பதிவுசெய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்குவனம் பகுதியில் விஐபி கார்டனில் வசித்து வருபவர் மதுமிதா. பிரபல யூட்யூபரான இவர் தனது சேனலில் 500 ரூபாய்  பணக்கட்டுகளை தன் மீதும், தன் குழந்தை மீதும் அள்ளி வீசுவது போலவும், தனது வீட்டில் தங்கம், வைர  நகைகள் அதிக அளவில் இருப்பது போலவும் தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி அவரது வீட்டில் புகுந்த திருடர்கள், 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4  பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், தனது வாக்குமூலத்தில், மதுமிதாவின் வீடியோக்களைப் பின் தொடர்ந்து கொள்ளை கொள்ளையடித்ததாகத் தெரிவித்திருந்தார்கள். இப்படியிருந்தும், இந்த திருட்டு சம்பவத்திற்குப் பின்னர் மீண்டும் பண கட்டுக்களை வைத்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார் மதுமிதா. இதனால், மதுமிதாவின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் மதுமிதா மீது தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜாக்கமங்கலம் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். FIR தகவலின்படி, மதுமிதா தன்னை ஒரு பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி கோவை, திருநெல்வேலி நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பாக்களில் வேலை பார்த்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள ஸ்பாவில் வேலை பார்த்தபோது அங்கு மசாஜ் செய்ய வந்த 89 வயது தொழிலதிபர் ஒருவரிடம் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். ஒரு நாள் தொழிலதிபரை செல்போனில் அழைத்த அவர் தன்னை காரில் அழைத்து செல்ல கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து காரில் அழைத்துச் சென்றபோது காரில் வைத்து அவருக்கு மசாஜ் செய்துள்ளார். அப்போது அவரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். மேலும், இதுபற்றி ஏதாவது புகார் செய்தால் அசிங்கப்படுத்தி விடுவதாக கூறி அவரை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அவர் இதுவரை புகார் கொடுக்காத நிலையில், நேற்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  அதன் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேனி தேக்கம்பட்டி சிறை கைதிகள் சித்திரவதை ! விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேனி தேக்கம்பட்டி சிறை கைதிகள் சித்திரவதை ! விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Embed widget