மேலும் அறிய

"COURT சொல்லியும் கேட்கல" பழனி கோயில் நில மோசடி FIR-ல் அம்பலமான உண்மை

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமடத்து நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த புகாரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள FIR-ன்  b முழுமையான விபரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் முறைகேடாகக் கிரயம் செய்யப்பட்ட விவகாரத்தில், பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த முறைப்படியான புகாரின் பேரில் பழனி அடிவாரம் போலீசாரால்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலி டிரஸ்ட் நிர்வாகி முருகதாஸ், உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பழனி இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது FIR போடப்பட்டுள்ளது.  

​அவர்கள் மீது போலி ஆவணங்களை உருவாக்குதல் (பிரிவு 336(3)), போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களை உண்மை என நம்பவைத்து பயன்படுத்துதல் (பிரிவு 340(2)), ஏமாற்றுதல் மற்றும் சொத்துக்களை முறைகேடாக அபகரித்தல் (பிரிவு 318(4)), குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் (பிரிவு 49) மற்றும் கூட்டுச் சதி (பிரிவு 61(2)) ஆகிய 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

​உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த மடத்தின் சொத்துக்கள் பழனி கோயில் இணை ஆணையரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வருவாய்த்துறை ஆவணங்களிலும் 'அருள்மிகு தண்டபாணி சுவாமி மடம்' என்ற பெயரிலேயே பட்டா உள்ள நிலையில், தற்பொழுது முருக பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்படும் இந்த நிலம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. 

மேலும், எவ்வித வில்லங்கமும் செய்யக்கூடாது என கடந்த 2-ம் தேதியே திருமடத் தக்கார் சார்பில் சார்பதிவாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.  

​இந்த அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும், கோயில் நிர்வாகத்தின் முன்அறிவிப்புக் கடிதத்தையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்த நிலத்திற்கு எவ்வித பாத்தியதையும் இல்லாத டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் என்பவர் மூலம், கடந்த 6-ம் தேதியன்று வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவருக்கு, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மோசடியாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார் என்பது முதல் தகவல் அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது

தமிழ்நாடு வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget