மேலும் அறிய

Saibaba statues removed : "சாய்பாபா கடவுளே இல்லை" தூக்கி வீசப்படும் சிலைகள்! உ.பி-யில் பதற்றம்!

சாய்பாபா கடவுளே இல்லை, அவரை புனித பூமியான காசியில் கோயிலுக்குள் வைத்து வணங்குவதா? எம்பெருமானான சிவனை மட்டுமே காசியில் வழிபட வேண்டும் என தெரிவித்து சனாதன ரக்‌ஷக் தல் என்ற அமைப்பு கோயிலில் உள்ள சாய் பாபா சிலைகளை அகற்றி வரும் சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

வாரணாசியின் லோஹாத்தியா பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலிலிருந்து கடந்த அக்டோபர் 1ம் தேதி, 5 அடி உயர சாய் பாபா சிலையை சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பு அகற்றியது. அந்த சிலையை வெள்ளை நிற துணியில் சுற்றி, கங்கை நதியில் வீசிய சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பு இந்து கோயில்களிலிருந்து சாய்பாபா சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வறுபுருத்தி வருவது உத்திரபிரதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது..

14 கோயில்களில் தற்போது வரை சாய் பாபா சிலை அகற்றப்பட்டுள்ள நிலையில், சாய் பாபா சிலையை அகற்ற மறுக்கும் கோயில்களுக்கு நேரடியாக சென்று 15 நாட்களுக்குள் சிலை அகற்றப்பட வேண்டும், இல்லையெனில் சாய் பாபா சிலை உடைக்கப்பட்டு அகற்றபடும் என்று மிரட்டி வருகின்றனர் .

அன்பையும், தானத்தையும் போதித்த இந்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளாக வழிபடபடுகிறார் சாய்பாபா. இந்நிலையில் இத்தனை நாட்களாக பழக்கத்தில் இருக்கும் சாய் பாபா வழிப்பாட்டை, தற்போது நிறுத்த சொல்வது ஏன் என்ற கேள்வி சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பின் தலைவர் அஜய் ஷர்மாவிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்க்கு பதிலளித்துள்ள அவர் “சாய் பாபா ஒன்றும் இந்து கடவுள் இல்லை. எந்த வேதங்களிலும், புறானங்களிலும், பகவத் கிதையிலும் சாய்பாபா குறித்து குறிப்பிடபட்டிருக்கவில்லை. அப்படி இருக்கும் போது, கோயிலுக்குள் சாய்பாபாவை வைத்து வழிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்பெருமானான சிவனை மட்டுமே காசியில் உள்ள கோயில்களில் வைத்து வழிபட வேண்டும். இறந்துபோனவரை கடவுளுக்கு சரிசமமாக கோயிலில் வைத்து வழிப்படாதீர்கள், தேவையெனில் வீட்டில் வைத்து வழிப்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பிரசித்தி பெற்ற அயோத்தியின் ஹனுமன்கர்ஹி கோவிலின் அர்ச்சகர் ராஜூ தாஸ் “சாய் பாபா ஒரு தர்ம குரு, மகா புருஷ்ஷாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் கடவுள் இல்லை. நாட்டிலுள்ள சனாதனிகள் அனைவரும் சாய் பாபா சிலைகளை கோயிலில் இருந்து அகற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாய்பாபா சிலையை வறுபுறித்தி, மிரட்டி தங்களை அகற்ற வைத்ததாக கோயில் அர்ச்சகர் இருவர் கொடுத்த புகாரின் பேரில் சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பின் தலைவர் அஜய்ஷர்மாவை கைது செய்துள்ளது போலீஸ். மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த சூழளில் கடந்த சில நாட்களாகவே, சாய் பாபா சிலைகளை அகற்றும் சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பினர், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் இதை சரியான நடவடிக்கை என்றும், பலர் இது தவறான செயல் என்றும் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம் லட்சக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் மத நம்பிக்கையையும், உணர்வையும் காசியில் அரங்கேறிவரும் இந்த நடவடிக்கைகள் புண்படுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழளில் உடனே இது போன்ற நடவடிக்கைகள் கைவிட பட வேண்டும் என்று சாய் பாபா பக்தர்கள் வளியுறுத்தி வருகின்றனர். இதனால் உ.பியின் பல நகரங்களில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"மேயர் ஏன் வரலன்னு , அவங்கக்கிட்ட கேளுங்க" முகாமில் எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் அதிரடி பதில்
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
தாய்மாமன் தங்க மோதிரம்: மதுரை அரசு மருத்துவமனையில் 10 நாட்களில் 4600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் !
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
விருதுநகர் வன உயிரின வார விழா: மாணவர்களுக்கு விருது, பாதுகாப்புக்கு ஆட்சியர் அழைப்பு!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget